சிங்கப்பூரில் இருந்து வந்த மகன்! அடித்து தூக்கில் ஏற்றிய தந்தை! உதவி செய்த தாய்! நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்!

காஞ்சிபுரம் அருகே மகனை அடித்துக் கொன்றுவிட்டு தூக்கில் ஏற்றிய தந்தையும், கொலைக்கு உடந்தையாக இருந்த சகோதரன் மற்றும் தாய் என குடும்பமே சிக்கியுள்ளது.


காஞ்சிபுரம் அய்யம்பேட்டை கந்தப்பர் தெருவைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற அரசு ஊழியரான மணி. இவரது தமிழ்செல்வி. இவர்களுக்கு  மூன்று மகன்கள் உள்ளனர்.

இவர்களில் மகேஷ் எனும் மகன் சிங்கப்பூரில் வேலை செய்து வந்துள்ளார். இரு தினங்களுக்கு முன் ஊருக்கு வந்திருந்த மகேஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இதனால் கதறி அழுத மகேசின் தாய், தந்தை, சகோதரர்களுக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.

அப்போது சிலர் மகேசின் தலையில் காயம் இருப்பதையும் அங்கிருந்து ரத்தம் வழிவதையும் பார்த்துள்ளனர். இதனை தொடர்ந்து போலீசாருக்கும் தகவல் சென்றது. விரைந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில் தந்தையே தனது மகனை அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது.

இந்த கொலைக்கு பெற்ற தாயும், உடன் பிறந்த சகோதரர்களும் உடந்தையாக இருந்துள்ளனர்.  ஞாயிற்றுக்கிழமை இரவும் வழக்கம்போல் குடித்துவிட்டு வந்து குடும்பத்தினருடன் மகேஷ் தகராறில் ஈடுபட்டுள்ளார். 

அப்போது ஆவேசமடைந்த தந்தை தந்தை மணி, மூத்த மகன் மோகனவேல் மற்றும் இளைய மகன் ரமேஷ் ஆகியோருடன் சேர்ந்து மகேஷை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த மகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

இதனால் பதறிய குடும்பத்தினர் மின்விசிறியில் அவரது உடலை தொங்கவிட்டு தூக்கிட்டுக்கொண்டது போன்று நாடகமாடியுள்ளனர். இதனையடுத்து மகேஷின் தந்தை மணி, சகோதரர்கள் மோகனவேல், ரமேஷ் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக தாய் தமிழ்செல்வி ஆகியோர் கம்பி எண்ணி வருகின்றனர்.