கேட்டதை தர மறுத்த மனைவி! 3 பெண் குழந்தைகளை அழைத்துச் சென்று தந்தை செய்த படுபாதக செயல்!

தெலுங்கானா மாநிலத்தில் மது குடிக்க பணம் தர மறுத்த மனைவியை பழிவாங்க தனது 3 மகள்களையும் ஏரியில் வீசி கொலை செய்த தந்தையின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தெலுங்கானா மாநிலத்தில் உள்ள காமாரெட்டி மாவட்டத்தில் உள்ள தாட்கோலி கிராமத்தை சேர்ந்தவர் பயாஸ். இவர் அப்பகுதியில் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சில ஆண்டுகள் ஆன நிலையில் இவருக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பயாஸ் தினமும் வேலை முடித்து வீட்டிற்கு வரும் போது மது அருந்திவிட்டு தனது மனைவியை துன்புறுத்தியுள்ளார்.

பயாஸ் மது போதைக்கு அடிமையானதால் சூதாட்டம் போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இதன் காரணமாக தன்னிடம் இருந்த அனைத்து பணம் மட்டும் பொருள்களை இழந்துள்ளார். இந்நிலையில் சம்பவ தினத்தன்று தனது மனைவியிடம் மது குடிப்பதற்காக பணம் கேட்டுள்ளார்.அவரது மனைவி பணம் தர மறுத்ததால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் அவர் தனது மனைவியை கடுமையாக தாக்கியுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து அவரது மனைவி பணம் தராததால் ஆத்திரத்தில் மனைவி மீது உள்ள கோபத்தில் தனது 3 மகள்களையும் அழைத்துக் கொண்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் அங்குள்ள ஏரியில் மகள்களை தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார்.

இதையடுத்து அந்த வழியாக வந்த ஊர் பொது மக்கள் உடனே ஏரியில் உள்ள குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து குழந்தைகள் மூவரும் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளனர். இதையடுத்து உடனே காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர்.

இறந்த மூவரின் உடலை ஏரியின் கரைக்கு எடுத்து வந்தனர். இதையடுத்து குழந்தைகளின் உடலை பார்த்து அவரது தாய் கதறி அழுதுள்ளார். இந்நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பயாஸ் என்பவர் மீது கொலைகுற்றப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் தலைமறைவாக உள்ள பயாஷை தீவிரமாக தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மதுவுக்கு அடிமையாகி தான் பெற்ற பிள்ளைகளையே கொடூரமாக கொலை செய்த தந்தையின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.