மனைவிக்கு 4வதாக பிறந்த பெண் குழந்தை..! டென்சனில் முதல் 3 குழந்தைகளை தூக்கி கிணற்றில் வீசிய கொடூர தந்தை! பதற வைக்கும் காரணம்!

ஜூனாகத்: தொடர்ந்து 4 பெண் குழந்தைகள் பிறந்ததால், அதிருப்தி அடைந்த தந்தை செய்த செயல் குஜராத் மக்களை அதிர்ச்சியடை செய்துள்ளது.


குஜராத் மாநிலம், ஜூனாகத் மாவட்டத்தில் உள்ள கம்பாலியா கிராமத்தைச் சேர்ந்தவர் சோலங்கி. 35 வயதான இவருக்கு, அஞ்சலி (7 வயது), ரியா (5 வயது), ஜல்பா (3 வயது) என ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் அவரது மனைவி கர்ப்பம் தரித்தார். இந்த குழந்தை, ஆண் குழந்தையாக இருக்கும் என எதிர்பார்த்த சோலங்கிக்கு மேலும் அதிர்ச்சி நேரிட்டது.

அதுவும் பெண் குழந்தையாக பிறக்கவே, கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். தினசரி கூலி வேலை செய்யும் சோலங்கி, 4 பெண் குழந்தைகளை எப்படி கரை சேர்ப்பது என, அடிக்கடி புலம்பி வந்திருக்கிறார்.  

இதன்பேரில், கடந்த புதன்கிழமை பிற்பகலில் திடீரென தனது 3 மகள்களையும் வீட்டின் முன்பு உள்ள கிணற்றில் தள்ளிவிட்டுள்ளார். அவர்கள் அனைவரும் துடிதுடித்து இறந்த நிலையில், சோலங்கி, வீட்டின் முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 4வது குழந்தை, தாயுடன் இருந்ததால் உயிர் பிழைத்துவிட்டது.

இதுபற்றி அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே, அவர்கள் விரைந்து வந்து சடலங்களை மீட்டனர். போதிய வருமானம் இல்லாததால், சோலங்கி இப்படி செய்திருக்கலாம் என, முதல்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.