மத்திய பிரதேச மாநிலத்தில் ஓடிப்போன மகளுக்கு தந்தை இறுதிச் சடங்கு செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
உயிருடன் இருக்கும் மகளுக்கு இறுதிச் சடங்கு செய்த தந்தை! அதிரவைக்கும் காரணம்!
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் அந்த 19 வயது இளம்பெண். அவர் ஒரு இளைஞனை காதலித்ததாக கூறப்படுகிறது. கடந்த மாதம் 25ஆம் தேதி தனது காதலனுடன் ஓடிப்போக முடிவு செய்த போது தந்தை இது போன்ற ஒரு முறை விபரீத முடிவை எடுப்பார் என அந்தப் பெண் சற்றும் எதிர்பார்க்கவில்லை
கடந்த மாதம் 25ஆம் தேதி அந்தப் பெண் தனது காதலனுடன் ஓடிப்போனார். இதனால் விரக்தி மற்றும் கோபத்தின் உச்சத்துக்கே சென்ற தந்தை கவுரவக் கொலை முடிவெல்லம் எடுக்கவில்லை என்ற போதும் அவரது மன நிலை அவரை அதற்கு இணையான வேறுவிதமான முடிவை எடுக்கச் செய்தது
கொல்வதை விட இறந்துவிட்டதாகருதி தலை முழுகிவிட்டால் மனம் நிம்மதியடையக் கூடும் என கருதிய அவர், தன்னைப் பொறுத்தவரை தனது மகள் இறந்து விட்டதாக ஊருக்கு அறிவித்தார் மேலும் மகளின் இறுதி சடங்குகளுக்காக காரிய பத்திரிக்கை அச்சிட்ட அவர் உறவினர்களுக்கும் கிராமத்தினருக்கும் கொடுத்தார்.
இதை எடுத்து அவர்கள் முன்னிலையில் பாரம்பரிய முறைப்படி இறந்துபோனவர்களுக்கு செய்த சடங்குகள் அனைத்தையும் செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.