கழுத்தை நெறித்த தந்தை! கத்தியால் குத்திய அண்ணன்! 15 வயதில் சிறுமிக்கு அரங்கேறிய கொடூரம்!

ஷாஜகான்பூர்: கட்டாய திருமணம் செய்ய மறுத்த சிறுமியை, அவரது தந்தையும், சகோதரனும் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.


உத்தரப் பிரதேச மாநிலம், ஷாஜகான்பூரை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருக்கே இந்த கொடுமை நிகழ்ந்துள்ளது. சிறுமி மேற்படிப்பு படிக்க விரும்புவதாகக் கூறிய நிலையில், அவரது குடும்பத்தினரோ திருமணம் செய்துகொள்ளும்படி கட்டாயப்படுத்தி வந்துள்ளனர்.

ஒருகட்டத்தில், பெற்றோரின் கட்டாயம் தாங்காமல், தனது சகோதரியின் வீட்டிற்குச் சென்று, சிறுமி தங்கியுள்ளார். ஆனால், அங்கேயும் விடாமல், வற்புறுத்தி அவரை பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். 

திடீரென அவரை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்ற தந்தை துணியால் கழுத்தை இறுக்கிப் பிடிக்க, சிறுமியின் அண்ணனே கத்தியால் குத்தியுள்ளான். படுகாயமடைந்து, கதறியழுத சிறுமியை அவர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்திவிட்டு, அவரை அருகில் உள்ள கால்வாயில் வீசி விட்டு சென்றுவிட்டார்களாம்.

ஆனால், காயங்களுடன் அங்கிருந்து நீந்தி தப்பிய சிறுமியை, பொதுமக்கள் சிலர் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.  கட்டாய திருமணம் காரணமாக தன் குடும்பத்தினரே கொலை செய்ய முயன்றதாகக் கூறி, அந்த சிறுமி, தற்போது போலீசில் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

இதன்பேரில், போலீசார் சிறுமியின் தந்தை மற்றும் அண்ணன் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.