பெற்ற மகளின் அந்தரங்க புகைப்படங்களை அனுப்பி வீட்டுக்கு 30 நண்பர்களை அழைத்த கொடூர தந்தை! நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

மனைவியையும், 12 வயது மகளையும் பாலியல் தொழிலில் தந்தை ஈடுபடுத்திய கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.


தென்னிந்தியாவில் பள்ளி ஒன்றில் படித்து வரும் 12 வயது சிறுமி வகுப்பு ஆசிரியையிடம் சென்று தனக்கு நேர்ந்த கொடூரங்களை சொன்னார். தன்னுடைய தந்தை மிகவும் மோசமானவர் என்றும் மது அருந்திவிட்டு நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் ஒரு அறையில் தன்னுடைய தாயை பாலியல் பலாத்காரம் செய்ய தந்தையே உடந்தையாக இருந்ததாகவும் வேதனை தெரிவித்தார். இதன் மூலம் பணம் சம்பாதித்து வந்த தந்தை 12 வயது மகள் என்றும் பாராமல் தன்னையும் அவர்களின் நண்பர்களுக்கு இரையாக்கியதாகவும் அழுது கொண்டே கூறினார்.

மேலும் தன்னை நிர்வாணமாக படம் எடுத்து பலருக்கு அதை அனுப்பி தன்னை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக வேதனை தெரிவித்தார் 12 வயது சிறுமி. மேலும் அடிக்கடி தன்னை மருத்துவமனைக்கு அழைத்து சென்று நோய் ஏதாவது உள்ளதாக என பரிசோதித்ததாகவும் சிறுமி குறிப்பிட்டுள்ளார். 

இதையடுத்து ஆசிரியர் தந்த தகவலில் மனநல மருத்துவர்கள் சிறுமியிடம் பிரச்சனைகளை கேட்டறிந்தனர். பின்னர் அந்த சிறுமி குழந்தைகள் நல அமைப்பினரால் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தகவல் அறிந்து வந்த போலீஸ் தந்தை மற்றும் அவரது நண்பர்கள் மீது வழக்குப்பதிந்துள்ளது. இதுவரை தன்னை பாலியல் பலாத்காரம் செய்த 30 பேரில் 20 பேரை அடையாளம் காட்டியுள்ளார் சிறுமி.