பேட்ட தியேட்டரில் ரசிகர் கொடூர கொலை! தவிக்கும் குடும்பம்! கண்டுகொள்ள மறுக்கும் ரஜினி!

பேட்டை திரைப்படம் ஓடிக்கொண்டிருந்த திரையரங்கில் ரசிகர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது.


உலகம் முழுவதும் பொங்கல் வெளியீடாக கடந்த ஜனவரி மாதம் ரஜினியின் பேட்ட திரைப்படம் வெளியானது.    திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள திரையரங்கில் ரஜினி ரசிகர் மணிகண்ட பிரபு என்பவர் திரைப்படத்தை ஜனவரி 12-ஆம் தேதி பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்.

அப்போது மணிகண்டபிரபு சிகரெட் பிடித்த படியே படத்தை பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பின் சீட்டில் அமர்ந்திருந்த திரு மூர்த்தி என்பவர் மணிகண்டப் பிரபுவிடம் பிரச்சனை செய்ததாக கூறப்படுகிறது. 

வாக்குவாதம் முற்றியதில் மணிகண்டபிரபுவை திருமூர்த்தி மிகக் கடுமையாக தாக்கியதாக சொல்கிறார்கள். திரையரங்கில் இருந்த ஒரு கட்டையை வைத்து மணிகண்டபிரபுவை திருமூர்த்தி தாக்கியதில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி மணிகண்டபிரபு நான்கு நாட்களுக்குப் பிறகு உயிரிழந்தார். இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மேல் சென்ற நிலையில் உயிரிழந்த மணிகண்டபிரபுவின் குடும்பம் எந்த உதவியும் இன்றி நிர்க்கதியாகி உள்ளது.

பேட்டை திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த போது புகை பிடிக்கும் விவகாரத்தால் இந்தக் கொலை நடந்து இருப்பதால் ரஜினி தலையிட்டு தவிக்கும் மணிகண்ட பிரபுவின் குடும்பத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.