ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்த ரசிகர்! ஆத்திரத்தில் பிரபல நடிகர் செய்த மோசமான செயல்!

சல்மான் கான் இந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர். இவருக்கு தற்போது 53 வயது ஆகிறது.


 53 வயது ஆனாலும் தற்போது வரை அவருக்கு திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் உலக அழகி ஐஸ்வர்யா ராயின் முன்னாள் காதலர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது அடுத்த படமான பாரத் என்ற படத்திற்காக அருகிலுள்ள ஸ்டுடியோவிற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார் சல்மான்கான்.

 இந்த எளிமை பார்த்த பல ரசிகர்கள் அவர் செல்லும்போது ரோட்டிலேயே புகைப்படங்களும் வீடியோக்களும் எடுத்தனர். இதனை கண்டு தேவையில்லாமல் கடுப்பான சல்மான்கான் உடனடியாக தனது உதவியாளரிடம், வீடியோ எடுத்தவர்களின் செல்போனை கைப்பற்ற அனுப்பியுள்ளார். அவர் செல் போனை கைப்பற்றியவுடன் கடுப்பான அந்த ரசிகர் போலீசில் கம்ப்ளைன்ட் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.