வீட்டில் நேர்ந்த திடீர் துயரம்...! அதிர்ச்சியில் உறைந்துள்ள நீயா நானா கோபிநாத்!

பிரபல தொலைக்காட்சி நடத்த கூடிய விவாத நிகழ்ச்சி தான் நீயா நானா, இந்த நிகழ்ச்சி துவங்கிய காலம் முதலாக இதனை தொகுத்து வழங்கி வருபவர் தான் கோபி நாத்.


எத்துனை நிகழ்ச்சிகள், தொகுப்பாளர்கள் வந்தாலும் பல ஆண்டுகளாக அவருக்கென தனி பாணியில் பயணிப்பவர் கோபிநாத். அந்த வகையில் பிரபல தொகுப்பாளராக இருந்தவர், சமீபத்தில் வெள்ளித்திரையிலும் ஒரு சில படங்களின் முக்கியமான வேடங்களில் தென்பட துவங்கினார்.

இந்த நிலையில் தான் அவரது தந்தையார் திரு. சந்திரன் அவர்கள் தொடர் உடல் நிலை காரணமாக காலமானார். நேற்று அவர் காலமானதை அடுத்து, அவரது உடல் சொந்த ஊரில் நல்ல முறையில் தகனம் செய்யபட்டது மேலும் அவரது உடலுக்கு சினிமா நட்சித்திரங்கள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.