பெட்ரோல் பங்கில் பிரபல நடிகைக்கு ஏற்பட்ட விபரீதம்! தாயுடன் சேர்ந்து கதறிய பரிதாபம்!

காரில் தவறுதலாக அதிகம் நிரப்பிய பெட்ரோலுக்கு காசு தராமல் வம்பிழுத்த நடிகை பெட்ரோல் பங்க் ஊழியர்களால் தாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார்.


மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பல்வேறு தரப்பு ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டவர் டிவி நடிகை ஜூகி சென் குப்தா. நேற்று முன்தினம் தனது சொந்த பந்தங்களுடன் சென்ற ஜூகி கொல்கத்தாவின் கஸ்பா பகுதியில் ஒரு பெட்ரோல் பங்க்கில் தனது காருக்கு பெட்ரோல் நிரப்பியுள்ளார்.

2 ஆயிரம் ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்புமாறு நடிகை கூறியதை கவனிக்காத ஊழியர் 2,500 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பியதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த ஜூகியும் அவரது பெற்றோரும் பங்க் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கூடுதலாக நிரப்பிய பெட்ரோலுக்கு பணம் தரமுடியாது என நடிகையின் தந்தை ஆவேசமாக பேச அவரை பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அடித்துள்ளனர். அவர்களை தடுக்க வந்த நடிகையையும் பளார் பளார் என 2 அறை விட்டுள்ளனர்.

பின்னர் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் பணத்தை கொடுத்து விட்டு செல்லுமாறு காரின் சாவியை பறித்துக் கொண்டனர். இதையடுத்து ஜூகியின் குடும்பத்தினா் கொடுத்த தகவலில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தின. எனினும் இந்த வழக்கில் யாரையும் கைது செய்யவில்லை என தெரிகிறது.

பெட்ரோல் பங்க்கில் நடிகை ஆவேசமாக கத்தியதை பார்த்த பொதுமக்கள் ஏதோ படப்பிடிப்பு காட்சிகள்தான் நடக்கிறது என ஆர்வமாக வேடிக்கை பார்த்துள்ளனர். பிரச்சனை போலீஸ் சென்ற பிறகுதான் பார்த்தது நிழல் காட்சிகள் அல்ல நிஜம் என புரிந்து கொண்டனர்.

டிவி சீரியலில் மிகவும் சாதுவான காட்சிகளில் நடித்து வந்த நடிகை ஜூகியின் இன்னொரு முகத்தை பெட்ரோல் பங்க்கில் பார்த்த ரசிகர்கள் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.

பங்க் ஊழியர்கள் மீது தவறு இருந்தாலும் அந்த கூடுதல் பெட்ரோலுக்கு பணம் கொடுத்திருந்தால் பிரச்சனை பெரிதாகி இருக்காது. எப்படியும் நாம் காருக்கு அடிக்கடி பெட்ரோல் போட்டுத்தானே ஆகவேண்டும். ஒரு முறை பெட்ரோல் நிரப்பினால் கார் என்ன ஒரு வருடமா செல்லப் போகிறது.

நடிக்கும்போது நியாயம், தர்மம், உண்மை எனும் வசனம் பேசும் நடிகைகள் தன்னுடைய காரில் நிரப்பிய பெட்ரோலுக்கு பணம் கொடுக்காமல் சென்றால் பங்க்கில் பணிபுரியும் ஏழைத் தொழிலாளர்களின் சம்பளத்தில்தான் பிடிப்பார்கள் என்பதை நடிகையாக மட்டுமல்ல மனிதனாகவாது புரிந்து கொள்ளவேண்டும்.