ஒரு காரையே கடத்திய கரடியின் குடும்பம்! அதிர்ந்து நின்ற உரிமையாளர்!

தனது காருக்குள் கரடிக் குட்டிகளின் குடும்பம் ஏறி விளையாடிய புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட அவை வைரலாகி வருகின்றன.


டென்னசி மாகாணம் ஒவன் ப்ரோவைச் சேர்ந்தவர் சாட் மோரீஸ். முடிதிருத்தும் நிலைய உரிமையாளரான இவர் தனது காரை நிறுத்திவிட்டு பணிக்குச் சென்ற நிலையில் மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது அவரது கண்களை அவராலேயே நம்ப முடியவில்லை அவரதுகாருக்குள்ளும் காரின் மீதும் சில கரடிகள் ஏறி விளையாடிக் கொண்டிருந்தன.

அந்த  நேரத்தில் அவருக்கு பதற்றம் ஏற்படுவதற்குப் பதில், அந்த கரடிக் குட்டிகளின் அழகு அவரை ரசிக்கத் தோன்றியது. தனது செல்ஃபோனை எடுத்த அவர், அந்தக் கரடிக் குட்டிகளை பல கோணங்களில் புகைப்படம் எடுத்தார். அதன் பிறகென்ன? சமூக வலைதளத்தில் பதிவிட வேண்டியதுதானே மோரீசும் இணையதளத்தில் பதிவிட்டார். 

அவரைப் போன்றே அந்தக் கரடிக் குட்டிகளுக்கு இணையதளத்திலும் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். 300க்கும் மேற்பட்ட ஷேர்கள், லைக்குகளை அள்ளியது அந்தப் பதிவு. இந்த பதிவைப் பார்த்து சிரித்து மகிழ்ந்த பலரும் கரடிகள் பார்க்க அழகாக இருப்பதாக பதிவிட்டு வருகின்றனர். பிறகு தங்கள் கார் ஹைஜாக்கிங்கை விட்டுவிட்டு கரடிகள் காட்டுக்குள் சென்றன.