ஏண்டா.. எங்க வீட்டு பொன்னு கேட்குதா உனக்கு..! மகளை காதல் திருமணம் செய்த நபரை வெட்டி கூறு போட்ட குடும்பம்! தேனி பரபரப்பு!

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே E.புதுக்கோட்டையை சேர்ந்த காதல் திருமணம் செய்த நபர் மீது தாக்குதல்.


தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள E.புதுக்கோட்டை கிராமத்தில் வசித்து வருபவர் 45 வயதுள்ள அய்யர் மகன்சேகர் .இவருடைய 24 வயதுள்ளமகள் காயத்திரி .கடந்த 2019 ஆகஸ்ட் 15ஆம் தேதி அதே ஊரைச் சேர்ந்த சிவராஜ் மகன் 24 வயதுள்ள ராஜ் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் பெற்றோர்களுடைய சம்மதமில்லாமல் நடந்ததால் அன்று முதல் பெண்ணின் பெற்றோருக்கும் . ராஜ் என்பவருக்கும் விரோதம் ஏற்பட்டது..

இந்நிலையில் இன்று ராஜ் தனது இருசக்கர வாகனத்தில் ஸ்டேட் பாங்க் காலனியில் உள்ள தனியார் மளிகை கடைக்கு மளிகை பொருட்கள் வாங்கும் போது. ராஜ் என்பவரை பின்தொடர்ந்து வந்த அய்யனார் மகன் சேகர் சேகர் மகன் 26 வயதுள்ள பிரகாஷ் மற்றொரு மகன் 24 வயதுள்ள ராஜேஷ் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வந்து அரிவாள் மற்றும் உருட்டுக்கட்டையை கொண்டு கடுமையான தாக்கியுள்ளார்கள் இத் தாக்குதலில் நிலைகுலைந்த ராஜ் என்பவர் சத்தம் போடவே அங்கிருந்து மூவரும் தப்பிஓடிவிட்டார்கள்

தாக்குதலில் காயம் பட்ட நபரை 108 வாகனத்தின் மூலமாக மூலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் பற்றி பெரியகுளம் காவல்துறை அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றார்கள்.

ஆட்கள் அதிகமாக நடமாடும் பகுதியில் இச் சம்பவம் நடந்திருப்பதால் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் பயத்தையும் உண்டாக்கி இருக்கிறது.