உபியின் மேற்குப்பகுதி அம்ரோஹாவில் உள்ள ஒரு கிராமத்தில் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவருக்கும், பக்கத்து கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் இரண்டு ஆண்டு முன்பு திருமணம் நடைபெற்றது.
பேஸ்புக்கில் போலி பெயரில் அக்கவுண்ட்! காதலர்களான கணவன் மனைவி! நேரில் பார்த்த பிறகு நேர்ந்த விபரீதம்!

கணவன், மனைவி இருவருமே புனைபெயரில் புது புது முகநூல் கணக்கு தொடங்கி, போலி புகைப்படங்கள் பதிந்து அவ்வப்போது புதிய நண்பர்களுடன் உரையாடி வந்துள்ளனர். இருவருக்குள் தொடர்ந்த தீவிர நட்புரையாடல், கண்மூடித்தனமான காதலாக மாறி உருவானது. முகநூலிலேயே ஒருவருக்காக மற்றொருவர் உயிரை கொடுக்கவும் உறுதிமொழி ஏற்றனர்.
தம் காதலின் அடுத்த கட்டமாக நேரில் சந்திக்க முடிவு செய்து, கடந்த ஞாயிறன்று அம்ரோஹாவின் ஒரு உணவு விடுதிக்கு வந்துள்ளனர். வந்த இடத்தில் பரஸ்பரம் சந்தித்த இருவருக்கும் பேரதிர்ச்சி. உணவு விடுதியிலேயே கணவன்-மனைவிக்குள் சண்டை முற்றி இருவரும் பிரிந்து சென்றனர். பின் இரு கிராம பஞ்சாயத்தாரும் கூடி பேசியும் இருவருக்குள்ளும் சமாதானம் ஏறபடாததால், கணவன்-மனைவி தனித்தனியே பிரிந்து வாழ தொடங்கியுள்ளனர்.
அதாவது இருவருமே ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் உண்மையாக இல்லை. இதனால் தான் போலிக்கணக்கை உண்மை என்று நம்பி இருவரும் காதலித்துள்ளனர். தற்போது அந்த காதல் உண்மை அல்ல என்று தெரிந்த நிலையில் கணவன் மனைவியாகவும் வாழ இருவரும் லாயக்கற்றவர்கள் என்பதும் உறுதியாகியுள்ளது.
இதனால் வேறு வழியில்லாமல் பிரிந்து செல்வது தான் சரி என்று கணவனும் மனைவியும் முடிவெடுத்து பிரிந்துள்ளனர். ஆனால் அவர்களை மறுபடியும் சேர்த்து வைக்க உறவிர்கள் மற்றும் நண்பர்கள் முயன்று வருகின்றனர்.