உதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி

சிறுவர் வெள்ளாமை வீடு வந்து சேராது என்பார்கள். அதன்படி உதயநிதி களம் இறங்கியதால், தி.மு.க.வின் வெற்றி சிக்கலாகியுள்ளது. அது மட்டுமின்றி, தேவையில்லாமல் மோடியை விமர்சனம் செய்ததும் பெரும் சர்ச்சை ஆகியுள்ளது.


உதயநிதி பேசியபோது, “நீங்கள் எப்படி ஆட்சிக்கு வந்தீர்கள் என்பது எங்களுக்கு தெரியும். கட்சியின் மூத்த தலைவர்களை ஓரங்கட்டிவிட்டு குறுக்கு வழியில்தானே பிரதமர் பதவியை அடைந்தீர்கள். நீங்கள் கொடுத்த நெருக்கடி, அழுத்தம், தொல்லையை தாங்கிக் கொள்ள முடியாமல்தான் சுஷ்மா சுவராஜ் அருண்ஜெட்லி போன்ற தலைவர்கள் மரணமடைந்தனர். உங்களுக்கு மற்றவர்கள் வேண்டுமென்றால் பயப்படலாம். கருணாநிதியின் பேரனான நான் ஒருபோதும் அஞ்ச மாட்டேன்’‘ என்று அவர் பேசியது, தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உதயநிதியின் இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் தமிழக பாஜகவின் மாநில பொதுச் செயலாளர், கரு.நாகராஜன் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.அதில், “பிரதமர் மோடி கொடுத்த அழுத்தம் காரணமாகத்தான் முன்னாள் மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜூம், அருண் ஜெட்லியும் மரணமடைந்து விட்டதாக உதயநிதி தாராபுரம் திமுக பிரச்சார கூட்டத்தில் பேசியிருக்கிறார்.

அவர் அரசியல் ஞானம் சிறிதும் இல்லாமல் இதுபோல் பிரதமரை இழிவாக பேசியது கண்டிக்கத்தக்கது. உதயநிதியின் பேச்சு தேர்தல் நடத்தை விதிகளுக்கு முற்றிலும் எதிரானது. எனவே இந்தத் தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி போட்டியிடும் வாய்ப்பை தேர்தல் ஆணையம் ரத்து செய்யவேண்டும்.

திமுக நட்சத்திர பேச்சாளர் பட்டியலிலிருந்து அவருடைய பெயரை நீக்கவேண்டும். அவர் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கும் தடை விதிக்க வேண்டும்”என்று கூறப்பட்டுள்ளது.இப்பிரச்சினை தேசிய அளவில் விசுவரூபம் எடுக்க மறுநாளே உதயநிதி பல்டி அடித்தார்.

திருப்பூர், கோவை மாவட்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் அவர் பேசியபோது, “நான் சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி குறித்து தவறாக பேசியதாக பாஜக புகார் அளித்துள்ளது. நான் யாரையும் தவறாக பேசவில்லை. என்னை குறுக்கு வழியில் வந்துவிட்டதாக மோடி விமர்சித்தார். பாஜகவில் பல தலைவர்களை ஓரங்கட்டி வந்தவர்மோடி என்றுதான் சொன்னேன்.

அவரை அவதூறாக பேசவில்லை. தேர்தலில் நேரடியாக போட்டியிட்டால் பாஜகவால் ஒரு கிளைக் கழகச் செயலாளரை கூட தொட்டு பார்க்க முடியாது. அதனால்தான் குறுக்கு வழியில் வந்து என்னை தகுதி நீக்கம் செய்ய பார்க்கின்றனர். எனவே ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் எதிர்த்தரப்பு வேட்பாளரை மோடியாக கருதி களப்பணியாற்றி தோற்கடிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

தனது சகோதரியான செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது, பற்றி உதயநிதி கூறும்போது, “உங்களுக்கு தைரியம் இருந்தால் என் வீட்டில் வந்து சோதனை நடத்துங்கள். எனது வீட்டின் முகவரியை உங்களுக்கு தருகிறேன்” என்றும் கொந்தளித்தாஆனால் தாராபுரத்தில் உதயநிதி பேசிய வீடியோ பதிவில் அருண் ஜெட்லியும், சுஷ்மா சுவராஜூம் இறந்ததற்கு காரணமே மோடிதான் என்று கூறுவது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

டெல்லியில் உள்ள பிரபல தனியார் ஆங்கில தொலைக்காட்சி சேனல்கள் இதுதொடர்பான வீடியோக்களை வெளியிட்டு தொடர் விவாதங்களையும் நடத்தி வருகின்றன. இந்த விஷயங்கள் எல்லாமே உதயநிதிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்கிறார்கள். ஆக, உதயநிதிக்கு ஆப்பு ரெடியாகிறது.