ரிலையன்ஸ் ஜியோவை ரூ.47ஆயிரம் கோடிக்கு வாங்கிய பேஸ்புக்..! ஊரடங்கிலும் மெகா டீல்!

ரிலையன்ஸ் ஜியோவின் 9.99% பங்குகளை, 43,574 கோடிகளுக்கு சமூக வலைதள பெருநிறுவனமான ஃபேஸ்புக் வாங்கியுள்ளது.


ரிலையன்ஸ் குழுமத்தின், தொலைதொடர்புப் பிரிவான ரிலையன்ஸ் ஜியோ, 9.99% பங்குகளை அமெரிக்க சமூகவலைதள பெருநிறுவனமான ஃபேஸ்புக்குக்கு $5.7 billion., அதாவது 43,574 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது. இதன்மூலம், ஜியோ தளங்களின் மிகப்பெரிய மைனாரிட்டி பங்குதாரராக உருவெடுத்துள்ளது ஃபேஸ்புக்.  

இதன்மூலம் வேகமாக வளர்ந்து வரும் சந்தையில் இன்னும் அழுத்தமாக கால் பதிக்கவிருக்கிறது ஃபேஸ்புக். மேலும் இந்தியன் ஆயில் முதல் தொலைதொடர்பு வரையிலான கடன்களை கணிசமாக குறைக்க உதவுகிறது.

ஃபேஸ்புக் உடனான இந்த பங்கீட்டைக் குறித்து நிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி பேசுகையில், “2016-இல் ரிலையன்ஸ் ஜியோவைத் தொடங்கியபோது, இந்திய டிஜிட்டல் சர்வோதயாவைக் கொண்டு வரும் கனவுடன் அதைத் தொடங்கினோம்.

 ஒவ்வொரு இந்தியரின் வாழ்க்கைத் தரத்துடன், இந்தியாவின் டிஜிட்டல் திறனும் சேர்ந்தே வளரும்போது, இந்தியா சர்வதேச நாடுகளின் முன்னால் டிஜிட்டல் வளர்ச்சியும் பெற்ற நாடாக மிளிரும் என்பதே கனவாக இருந்தது. 

இந்தியர்கள் அனைவருக்குமான பயனாகவும், டிஜிட்டல் துறையில் வேகம்பெற்று வளர்வதற்கு ரிலையன்ஸைச் சேர்ந்த நாங்கள் அனைவரும் ஃபேஸ்புக்கை, நீண்ட கால பங்குதாரராக வரவேற்பதில் பெருமை கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.