பொங்கல் பண்டிகைக்கு வீட்டை சுத்தம் செய்த கணவன்! பரணில் கிடந்த அழகிய பொருள்! எடுத்து பார்த்தவருக்கு நேர்ந்த பயங்கரம்!

கரூர் மாவட்டத்தில் வீட்டை சுத்தம் செய்யும்போது மர்மப்பொருள் வெடித்ததில், ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ளது நெய்தலூர் காலனி. இங்கு சுதாகர் என்பவர் வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். வீட்டில் வர்ணம் பூசுவதற்காக பழைய பொருட்களை அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது தனக்கு பரிச்சயம் இல்லாத பொருள் ஒன்று அங்கு கிடப்பதை பார்த்துள்ளார்.

அது என்ன என்று தெரியாமல், தன்னுடைய மனைவியை அழைத்துள்ளார். பின்னர் அதை திறந்து பார்க்க முயற்சித்தபோது எதிர்பாராத விதமாக வெடித்து சிதறியது. இதையடுத்து ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். சப்தம் கேட்டு வந்த மனைவி மற்றும் பெற்றோர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு சுதாகர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர்களுடன் வந்த போலீசார், சிதறிக் கிடந்த மர்மப் பொருள்களை கைப்பற்றி ஆய்வு நடத்தி வருகின்றனர். பழைய பொருட்கள் இருந்த இடத்தில் மர்மப் பொருள் எப்படி வந்தது? யாரேனும் சுதாகரை பழிவாங்குவதற்காக வீட்டில் போட்டுவிட்டு சென்றனரா? உயிரிழப்பு ஏற்படும் அளவுக்கு வெடித்து சிதறிய அந்த பொருள் நாட்டு வெடிகுண்டா என்ற பல கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.