டைம்ஸ் தமிழ் சொன்னது அப்படியே நடந்தது! நாளை தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகிறார் கேப்டன்!

திங்கட்கிழமை அன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக நேற்று முன்தினம் times தமிழ் கூறியிருந்த நிலையில் அதை அப்படியே நடைபெற உள்ளது.


நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றுள்ளது. வடசென்னை கள்ளக்குறிச்சி விருதுநகர் மற்றும் திருச்சி ஆகிய தொகுதிகளில் தேமுதிக வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இவர்களை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் செய்வாரா மாட்டாரா என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக இருந்தது. இந்த கேள்விக்கு பதிலாக வரும் திங்களன்று வட சென்னை தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் ஆதரித்து விஜயகாந்த் பிரசாரம் செய்ய உள்ளதாக நேற்று முன்தினம் times தமிழ் தெரிவித்திருந்தது.

அதனை உறுதிப்படுத்தி தேமுதிகவில் இருந்து தற்போது செய்திக்குறிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளை வட சென்னை தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் மத்திய சென்னை பாமக வேட்பாளர் சாம்பால் தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார்.

இதன் மூலம் செய்திகளை முந்தித் தருவது times தமிழ் என்பது மீண்டும் ஒருமுறை உறுதியாகியுள்ளது.அந்த பழைய செய்தி பதிவை படிக்க இந்த லிங்க் கிளிக் செய்து பாருங்கள் https://timestamilnews.in/home/details/DMDK-head-vijayakanth-starts-campaign-on-15-april-3436