விருதுநகரில் மகள் திருமணம்! E Pass தராமல் இழுத்தடிக்கும் அதிகாரிகள்! கதறும் காவல் அதிகாரி!

விருதுநகரில் நடைபெறும் மகள் திருமணத்திற்கு செல்ல E - PASS நிராகரிக்கப்பட்டதால் பெரும் மன உளைச்சலில் ஓய்வுபெற்ற சென்னை போலீஸ் அதிகாரி குடும்பம்! உதவி கேட்டு காவல் ஆணையாளர் ஏகே விஸ்வநாதனிடம் முறையீடு!


சென்னை, கொளத்தூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் ஏ. சந்திரசேகரன். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி கடந்த ஜூன் மாதம் ஓய்வுபெற்றார். 

பணியில் இருக்கும்போதே தன் மகள் கல்யாணத்தை நடத்திட முயற்சி செய்தார். அதற்கான தருணம் இப்போது தான் வந்தது. 

மகள் காயத்திரி- முத்துமணி திருமணம் விருதுநகர் மாவட்டம், ஆவுடையார் புரத்தில் உள்ள வ. வு. சி. மனமகிழ் மன்றத்தில் வருகிற 24. 6. 2020 அன்று நடைபெறுகிறது. 

அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சந்திரசேகரன் செய்து முடித்தார். தன் மனைவி, மகள் (மணமகள் காயத்திரி) உட்பட 7 பேருடன் விருதுநகர் மாவட்டத்திற்கு செல்வதற்கு இ பாஸ் கேட்டு விண்ணப்பித்தார். 

திருமணத்திற்கு இ-பாஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதனால் அவர்அதிர்ச்சி அடைந்தார். அவருடைய குடும்பமே மன உளைச்சலில் உள்ளது. 

தங்களுக்கு உதவும்படி காவல் ஆணையாளர் ஏகே விஸ்வநாதனிடம் அக் காவலர் குடும்பம் முறையீடு செய்துள்ளது.