நடு வீட்டுக்குள் 25 அடி பள்ளம்! தோண்டத் தோண்ட தகடு! தாயத்து! சென்னையை மிரட்டும் அமானுஷ்ய வீடு!

சென்னையில் வீட்டில் செய்வினை இருப்பதாக மந்திரவாதி கூறியதை நம்பி சொந்தவீட்டில் 25 அடி வரை பள்ளம் தோண்டியுள்ளார் முன்னாள் போலீஸ் ஒருவரின் மனைவி.


சென்னை கீழ்ப்பாக்கம் அருகே உள்ளது டி.பி. சத்திரம். இங்கு ஓய்வு பெற்ற காவலர் ராஜா தனது மனைவி மைதிலி என்பவருடன் வசித்து வருகிறார். இவரது வீட்டுக்கு வெளியே மணல் மூட்டைகள் அடுக்கி வைப்பட்டிருப்பதையும் பள்ளம் தோண்டுவதை கவனித்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் வீட்டில் பள்ளம் தோண்டுவது எதற்காக என  மைதிலியிடம் விசாரித்துள்ளனர். குடும்பத்தில் தொடர்ந்து  கஷ்டங்கள் வருவதாகவும் தனது கணவர் பக்கவாதத்தால் அவதிப்படுவதால் மந்திரவாதி ஒருவரை அணுகியபோது வீட்டில் செய்வினை இருப்பதாக தன்னிடம் தெரிவித்ததாகவும் கூறினார்.

எனவே செய்வினை எடுத்தால் மட்டுமே வீட்டில் சுபிக்ஷம் திரும்பி வரும் என மந்திரவாதி சொன்னதை நம்பி பள்ளம் தோண்டி செய்வினை தேடிக் கண்டுபிடித்து வெளியில் எறிய முடிவு செய்ததாகவும் மைதிலி போலீசாரிடம் தெரிவித்தார். மேலும் பள்ளம் தோண்டியதில் சந்தேகத்திற்கிடமாக கயிறு, பொம்மை இருந்ததாகவும் போலீசாரிடம் மைதிலி தெரிவித்ததை அடுத்து அவரது அறியாமையை எண்ணி போலீசார் அங்கிருந்து சென்றனர்.

என்னதான் பகுத்தறிவு பற்றி பக்கம் பக்கமாக பட்டிமன்றங்களில் பேசினாலும் இதுபோல சில மந்திரவாதிகள் கூறுவதை அப்படியே நம்பி சொந்த வீட்டிற்கு உலைவைத்துக் கொண்ட செய்தி மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமையவேண்டும்.