ஒரு ஓட்டு கூட பதிவாகவில்லை! வாக்குச்சாவடி பக்கமே செல்லாத கிராம மக்கள்! அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்!

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஒரு வாக்காளர் கூட வராத நிலையில் திருவள்ளூர் தொகுதிக்கு உட்பட்ட நாகராஜ கண்டிகை எனும் கிராமத்தில் வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்பட்டது.


திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட கும்மிடிப்பூண்டி அருகே உள்ளது நாகராஜ கண்டிகை கிராமம். இந்த கிராமத்தில் செயல்பட்டு வந்த இரும்புத்தாது உருக்குத் தொழிற்சாலை சில ஆண்டுகளுக்குப் முன்பு மூடப்பட்டது. ஆனால் திடீரென சில மாதங்களுக்கு முன்பு அந்த ஆளை மீண்டும் திறக்கப்பட்ட இயங்க ஆரம்பித்தது. இதனால் தங்கள் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப் படுவதாகவும் நிலத்தடி நீர்மட்டம் குறைவதாகவும் கோரி நாகராஜ கண்டிகை கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

ஆனால் மக்களின் போராட்டத்தை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால் நேரம் பார்த்து காத்திருந்த பொதுமக்கள் தேர்தல் நேரத்தில் தங்கள் பதிலடியை அதிகாரிகளுக்கு கொடுத்தனர். நாகராஜா கண்டிகை கிராமத்தில் வாக்குச்சாவடியை அமைத்து அதிகாரிகள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆனால் பிற்பகல் வரை வாக்களிக்க அந்த வாக்குச்சாவடிக்கு ஒருவர் கூட வரவில்லை. இதனால் அதிர்ந்து போன வாக்குச்சாவடி பொறுப்பு அதிகாரி மாவட்ட ஆட்சியரை தொடர்புகொண்டு நாகராஜன் கண்டி கண்டிகை கிராமத்தில் வாக்களிக்க ஒருவர் கூட வராத விஷயத்தை கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து விரைந்து வந்த அதிகாரிகள் நாகராஜ கண்டிகை கிராமத்தில் உள்ள வாக்காளர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இரும்புத்தாது ஊருக்கு தொழிற்சாலையை மூடுவது குறித்த உறுதியான முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். ஆனாலும் அதனை ஏற்க மறுத்து வாக்களிக்காமல் பொருள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர் வாக்காளர்கள்.