சேலம் வீரர் நடராஜனுக்கு மாங்கனிநகர மைந்தர் எடப்பாடி வாழ்த்து.

ஐ.பி.எல். மேட்ச்களில் ஐதராபாத் அணி, அரையிறுதி வரை எட்டிப் பிடித்ததற்கு முக்கிய காரணம் என்றால், அது தமிழகத்தைச் சேர்ந்த பந்துவீச்சாளர் நடராஜன்தான். அவரது யாக்கர் பந்துகளை தாக்குப்பிடிக்க முடியாமதான் விக்கெட்கள் மளமளவென விழுந்தன.


இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 தொடரில் முதன்முதலாக நடராஜனுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து வருண் சக்கரவர்த்தி நீக்கப்பட்டுள்ளார். அந்த இடத்தில் அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சே

சேலம் சின்னம்பட்டியை சேர்ந்தவர் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன். இந்நிலையில் சேலம் நகரத்து மைந்தரான தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் நடராஜனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர், கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களை தமது அசாத்திய பந்துவீச்சால் திக்குமுக்காடச் செய்த நடராஜன், இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியும், பெருமிதமும் அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.