11ம் வகுப்பு மாணவி மர்ம மரணம்! மார்த்தாண்டம் குட்ஷெப்பர்ட் பள்ளியில் விபரீதம்!

கன்னியாகுமரி மாவட்டம் : மார்த்தாண்டம் பகுதியில் இயங்கும் பிரபல தனியார் பள்ளியான குட் ஷெப்பர்ட் பள்ளியில் படிக்கும் 11ஆம் வகுப்பு மாணவி பள்ளி வகுப்பறையில் ஆசிரியரியையின் கவனக்குறைவால் மர்ம மரணம்.!


மார்த்தாண்டம் பகுதியில் பிரபலமான பள்ளிகளில் ஒன்று  குட் ஷெப்பர்ட் பள்ளி ஆகும். இந்தப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பில் பயிலும் மாணவி ரெமி பிராங்கிளின் என்பவர் களியக்காவிளை அருகிலுள்ள சூரிய கோடு என்னும் பகுதியை சார்ந்தவர். நடுத்தர குடும்பத்தை சார்ந்த இம்மாணவி இப்பள்ளியில் 11ஆம் வகுப்பு கணிதப் பிரிவில் பயின்று வந்தார். 

இப் பள்ளியில் பயின்று வரும் மாணவ,மாணவியர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்து வருவதை பல சமூக ஆர்வலர்கள் பள்ளிக் கல்வித்துறைக்கு புகார் அனுப்பிய பின்பும், பல வருடங்களாக பள்ளிக்கல்வித்துறை கையூட்டு பெற்றுகொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர்,  இதனால் இப்பள்ளியின் ஆசிரியர் மற்றும் நிர்வாகத்தின் பயமுறுத்தலுக்கு ஆளாகி பல மாணவ மாணவிகள் மனஉளைச்சலுக்கு உள்ளாகி,  இப் பள்ளியில் பயின்று வருவதாக கூறப்படுகிறது. இதற்கு எந்தவித நடவடிக்கையும் பள்ளிக்கல்வித்துறை மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்றைய தினம் பள்ளி வகுப்பறையின் உள்ளே மாணவி ரெமி பிராங்கிளின் உயிரிழந்ததை தலைவலி காரணம் என பொய் சாயம்பூசி பள்ளி நிர்வாகம் தன்னைத் தற்காத்துக் கொள்ள முனைகிறது.

உயிரிழப்பு முன்பாக,  ரெமி பிராங்கிளின் வகுப்பறையில் கணித பாடத்தை கவனித்துக் கொண்டு இருந்ததாகவும், கணித ஆசிரியர் கரும்பலகையில் ஒரு கணக்கை அனைத்து மாணவர்கள் முன்னிலையில் செய்து காட்ட நிர்ப்பந்தித்து, ரெமி பிராங்கிளினை உளைச்சலுக்கு உள்ளாக்கியதாக மாணவர்கள் கூறுவதை நிராகரிக்க முடியாது.

கரும்பலகையின் முன்பு நின்று மாணவி ரெமி பிராங்கிளின் நிற்கதியாய் அவமானத்தில் சக மாணவர்கள் முன்பாக  வியர்த்துக் கொட்டி ஆசிரியரின் கோபத்துக்கு உள்ளாகி தனது இருக்கைக்கு சென்று அமர்ந்தார்.  இருக்கையில் இருந்த மாணவி பல நிமிடங்கள் தலையை சாய்த்த வண்ணம் வியர்த்து விறுவிறுக்க இருந்ததை சக மாணவர்கள் கூட உதவி செய்ய முடியாத நிலையில், கண்டிப்புடன் இருக்கும் ஆசிரியர் கோபத்துக்கு உள்ளாகாமல் மாணவர்களும் அமைதியாக இருந்தனர். 

பல நிமிடங்களாக ஒரு மாணவி தனது இருக்கையிலே வியர்த்து விறுவிறுக்க அலறியதை ஆசிரியை கூட கண்டும், காணாமலும் இருந்தது கொடுஞ்செயல் என பள்ளி நிர்வாகத்திற்கு தெரியவில்லை.ஒரு மணி நேரமாக உயிருக்கு போராடிய மாணவியை சக மாணவர்களோ, ஆசிரியர்களோ, பள்ளியின் நிர்வாகிகளோ மருத்துவமனைக்கு கூட, ஏன்? முதலுதவி கூட செய்யாமல் மாணவியை கொலை செய்தனர். 

ஒரு மணி நேரமாக சலனமற்று இருந்த மாணவியின் நிலையை உணர்ந்து, மாணவி உயிர் பிரிந்தது என தெரிந்து, அதன் பின்னர்தான் மாணவியின் பெற்றோருக்கு தகவல் கூறுகிறார்கள். மாணவிக்கு பயங்கரமாக தலை வலிக்கிறது உடனே அவளை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் வாருங்கள் என்று.!

மாணவியின் பெற்றோர் பதறியடித்து உடனே பக்கத்தில் இருக்கும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுங்கள்.. நாங்கள் வருகின்றோம் என்று கூறியதை பள்ளி நிர்வாகம் பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. மாணவியின் பெற்றோர் பள்ளிக்கு வரும் வரை காத்திருந்தது.

மாணவியின் பெற்றோர் வரும்பொழுது தனது மகளின் வகுப்பறை மாணவர்கள் இன்றி காலியாகி தனது மகள் மட்டும் இருக்கையிலே தலை சாய்த்து தூங்குவதை கண்டு மோளே...எழும்பு..மோளே...எழும்பு.. என குரல் எழுப்பிய போதும் சலனமின்றி இருப்பதைக் கண்டு பதறி போய் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். மாணவியின் உடலை பரிசோதித்த  பின் மாணவி இறந்து ஒன்றரை மணி நேரம் ஆகிவிட்டது என மருத்துவர் கூறினார்.

ஒன்றரை மணி நேரமாக ஒரு மாணவி சலனமற்று இருப்பதை கண்டு அவளை மருத்துவமனைக்கு கூட எடுத்துச்செல்ல முடியாத பள்ளி நிர்வாகம். அவசர எண் ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ வசதியை பயன்படுத்தி இருந்தால் மாணவி பலியாகிவிட வாய்ப்பு இல்லை.

பெற்றோர்களை அழைத்த போன் கால்108 எண்ணை தொடர்பு கொண்டிருந்தால் கூடமாணவிக்கு மருத்துவ உதவி கிடைத்திருக்கும்.!! ஏன்?.. பள்ளி வாகனத்தில் மாணவியை மருத்துவமனைக்கு எடுத்து செல்லவில்லை.  ஏன்?.. ஆம்புலன்ஸ் வசதியை பயன்படுத்தவில்லை? சக மாணவர்கள் இருந்த வகுப்பறை மாணவர்கள் இன்றி காலியானது ஏன்?

பெற்றோர்களோ சிந்தியுங்கள்... பொது மக்களே சிந்தியுங்கள்.... இந்நிலை நாளை நம் பிள்ளைகளுக்கும் வரலாம். கல்வி என்ற பெயரில் மாணவர்களை கொடுமைப்படுத்தி கொல்லும் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை பாயட்டும். கல்வி மாணவர்களுக்கு தேவைதான், அதை விட மாணவர்களின் உயிர் பெரிது.!!   இந்தக் கொடூர மரணத்திற்கு... நம் பகுதி அரசியல்வாதிகளும், ஆன்மீகவாதிகளும், சமூக ஆர்வலர்களும்,  மாணவர் அமைப்புகளும், மார்தட்டி திரியும் சுயநலவாதிகளும் அமைதியாக இருந்தால்.., இம் மரணத்திற்கு காரணம் நீங்கள் தான்!!