தி.மு.க. நிற்கும் 20 தொகுதியில் எத்தனை ஜெயிக்கும் தெரியுமா? தெளிவான ரிசல்ட் உள்ளே

புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளில் 20 தொகுதிகளில் நிற்கும் தி.மு.க. மற்ற தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுத்தந்துள்ளது.


அந்த 20 தொகுதிகளில் கள நிலவரம் எப்படியிருக்கிறது என்று தி.மு.க.வின் ஐ.டி. விங்க்கான ஓ..எம்.ஜி. ஒரு சர்வே எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

தனியார் நிறுவனத்துடன் சேர்ந்து ஓ.எம்.ஜி. குரூப் எடுத்திருக்கும் சர்வேயில் இருக்கும் தகவல்படி எந்தெந்த தொகுதியில் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு, தோல்வி என்பதைப் பார்க்கலாம். 

சென்னையைப் பொறுத்தவரை மத்திய சென்னையில் போட்டியிடும் தயாநிதி மாறன் எளிதில் வெற்றி பெறுகிறார். வட சென்னையில் போட்டியிடும் டாக்டர் கலாநிதி சிரமப்பட்டு வெற்றியைத் தொடுவார். ஆனால், அழகான வேட்பாளர் என்று கருதப்பட்ட தமிழச்சி தங்கப்பாண்டியன் தோல்வி அடையவே வாய்ப்பு அதிகம் என்று கணித்துள்ளது.

அதேபோல், ஸ்ரீபெரும்புதூரில் டி.ஆர். பாலு எளிதில் வென்றுவிடுவார். ஆனால் காஞ்சிபுரத்தில் போட்டியிடும் ஜி.செல்வம் தோல்வியடையவே வாய்ப்பு அதிகம். அரக்கோணத்தில் நிற்கும் ஜெகத்ரட்சகன் வெற்றி அடைகிறார். 

வேலூரில் நிற்கும் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் மற்றும் தர்மபுரியில் நிற்கும் செந்தில்குமார், செலத்தில் நிற்கும் எஸ்.ஆர்.பார்த்திபன் ஆகிய மூவரும் தோல்வி அடையவே வாய்ப்பு அதிகம். பொள்ளாச்சி வேட்பாளர் மகேந்திரன், திண்டுக்கல் வேலுச்சாமி, தென்காசி தனுஷ்குமார் ஆகியோருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. 

நெல்லையில் ஞானதிரவியம் தோற்றுப்போவார். தஞ்சையில் போட்டியிடும் பழனி மாணிக்கம், மயிலாடுதுறையில் போட்டியிடும் திருவிடைமருதூர் ராமலிங்கம் மற்றும் கள்ளக்குறிச்சியில் நிற்கும் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி ஆகியோர் வெற்றி பெற வாய்ப்பு அதிகம். நீலகிரியில் ஆ.ராசாவும், தூத்துக்குடியில் கனிமொழியும் எளிதாக வெற்றி பெறுகிறார்கள்.

திருவண்ணாமலையில் அண்ணாதுரைக்கு வெற்றி வாய்ப்பு நன்றாக இருக்கிறது, அதே நேரம் கடலூரில் போட்டியிடும் டி.ஆர்.வி.எஸ்.ஸ்ரீரமேஸ் தோல்வியைத் தழுவுகிறார். ஆக, இந்த 20 தொகுதியில் இப்போதைய நிலவரப்படி 13 தொகுதிகளில் தி.மு.க. எளிதில் வெற்றி பெறுகிறது, மீதமுள்ள 7 தொகுதிகளில் சிக்கல்தான்.