தேர்தல் ரிசல்ட்! தமிழகத்துக்கான 6 பாசிட்டிவ் அம்சங்கள் இதோ!

1. தேமுதிக கட்சியை மொத்தமா மக்கள் காலி பண்ணிட்டாங்க. அரசியல் வியாபாரத்திலேயே கேடுகெட்ட வியாபாரம் பிரேமலதா செய்தது. இதை விட பச்சையாக தனது கட்சியின் தொண்டர்களை விலைபேசி விற்க முடியாது. அந்தக் கேவலத்துக்கு முடிவு கட்டிட்டாங்க.


2. எத்தனைக் கட்சிகளை உருட்டி, மிரட்டி கூட்டணி வைத்துக் களமிறங்கினாலும் பாஜக எனும் மதவாதக் கட்சிக்கு இங்கே இடமில்லை என்பதை தமிழக மக்கள் தெளிவாக தீர்ப்பளித்துள்ளனர். அதிலும் ஹெச். ராஜாவை எல்லாம் ஜெயிக்க வச்சு நாடாளுமன்றம் அனுப்ப நாங்க என்ன கேனப்பயலுகளா என சிவகங்கை கேட்ட விதம்.

3. பாமக எனும் முழுமுதல் சந்தர்ப்பவாத, சுயநலக் கட்சிக்கு தொடர்ந்து நான்காவது தேர்தலாக ஆப்பு வைத்துள்ளர். குறிப்பாக அந்த ஆப்பை ஆழமாக அடித்து இறக்கியது ‘வன்னிய பெல்ட்’ என இவர்கள் கூறும் வட தமிழக மக்கள்தாம்! அன்புமணி கூட அவுட்.

4. “பெரியார் பூமியா? எங்கேயிருக்கு காமி?” என கொழுப்பெடுத்துப் பேசிய தலைமையை, மக்களைப் பிரிப்பதை முதல் கொள்கையாக வைத்திருந்த நாம் தமிழர் கட்சியை மக்கள் முழுவதுமாக புறந்தள்ளியுள்ளனர். குறைந்த பட்ச வாக்குகளை கூட அளித்து அவர்கள் பலன் அடைந்திடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்துள்ளனர். 

5.காலங்காலமாக திராவிடக் கொள்கையை ஏற்று அதன் வழி தனித்து நடக்கும் தமிழகத்தில் எந்தப்புறமும் அற்ற மய்யமான நிலைப்பாடு எடுத்து அரசியலுக்கு வந்த கமல்ஹாசனை தமிழகம் ஏற்கவில்லை. ஒரு ஒப்பற்றக் கலைஞனாகவே இருந்தாலும் அரசியல் களத்தில் அவர் பாதை தவறு என்று உணர்த்தினர்.

6. இந்தத் தேர்தல் முடிவு அதிமுகவுக்கு மிக முக்கியமான பாடம். திமுக, அதிமுக எனும் இரு பெரும் கட்சிகளை தமிழக மக்கள் எந்நாளும் கைவிடாமல் காப்பாற்றி வருவதின் முழுமுதற் காரணம், நமது தனித்தன்மை இவர்களால் மட்டுமே காப்பாற்றப்படும் என மக்கள் நம்புவதால்தான்! அந்த நம்பிக்கையை அதிமுக இழந்து விட்டது. சட்டமன்றத்தில் முழு மெஜாரிட்டி, நாடாளுமன்றத்தில் 50 எம்பி என வலிமையாக ஜெ விட்டுச் சென்றக் கட்சியை, ரெய்டு / வழக்கு/ கைதுகளில் இருந்து தப்பிக்க அதிமுகவை முழுமையாக மோடியின் பாதத்தில் வைத்த இழிசெயலை தமிழக மக்கள் எப்போதும் மறக்கவும் மாட்டார்கள்! மன்னிக்கவும் மாட்டார்கள்.