வாயு தொல்லையால் அவதிப்படுவோர்க்கு சில பயனுள்ள வீட்டு வைத்தியம்!

சில சமையங்களில் வயிற்றில் தங்கியிருக்கும் வாயு, தலைவலி, பித்தம், வாந்தி போன்ற உவாதைகளை உண்டாக்குகிறது.


வயிற்றில் வாயு இருந்தால், பாலுடன் கலந்த கருப்பு மிளகு பொடி சேர்த்து குடிக்கலாம். இலவங்கப்பட்டை உட்கொள்வதும் வாயு பிரச்சனையில் இருந்து நிவாரணம் தரும். வாயு ஏற்பட்டால், இலவங்கப்பட்டை தண்ணீரில் கொதிக்க வைத்து பின்னர் குளிர்விக்கவும்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த இலவங்கப்பட்டை தண்ணீர் குடிக்க வேண்டும். வாயு பிரச்சனை அறவே நீங்கும். ஒருவேளை உங்களுக்கு இதன் சுவை பிடிக்கவில்லை என்றால், அதில் சிறிதளவு தேனை சேர்த்துக்கொள்ளலாம்.

பெருங்காயத்தூள் உணவின் சுவையை அதிகரிக்கிறது, வாயு பிரச்சினையில் பெருங்காயத்தூளும் மிகவும் நன்மை பயக்கும். நீங்கள் ஒரு கிளாஸ் சூடான நீரில் பெருங்காயத்தூள் பெருங்காயத்தூள் சேர்த்து குடித்தல் உங்கள் வாயு பிரச்சனைக்கு தீர்வு அளிக்கும். நாள் ஒன்றுக்கு இரண்டு முதல் மூன்று பெருங்காயத்தூள் கலந்த தண்ணீரை குடிக்கவும்.