வல்லபாய் படேல் பிறந்த தினத்திற்கு முதல்வர் எடப்பாடியார் வாழ்த்து

இன்று, இந்தியாவின் இரும்பு மனிதரும், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை மந்திரியுமான சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினம் இன்று தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது.


இந்திய ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் அனைவரும் படேல் பிறந்த தினத்தை பிரமாண்டமாக கொண்டாடி வருகின்றனர். இந்த சூழலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் வல்லபாய் பிறந்த தினத்துக்கான வாழ்த்து செய்தியை ட்வீட் செய்திருக்கிறார்.

அவரது ட்வீட்டில், ’புதிய ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கிய ‘இரும்பு மனிதர்’ சர்தார் வல்லபாய் பட்டேல். பிறந்தநாளில் அவரை வணங்கி மகிழ்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.