விநாயகர் சிலைகளை தனிநபர்கள் நீர்நிலைகளில் கரைக்கலாம்..! முதல்வரின் வாழ்த்துச் செய்தியுடன் கூடிய அனுமதி.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தமிழக மக்களுக்கு வாழ்த்து செய்தி தெரிவித்துள்ளார்.


முழு முதற்கடவுளான விநாயகப் பெருமானின் அவதாரத் திருநாளில், மக்கள் தங்கள் இல்லங்களில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து, அருகம்புல், எருக்கம் பூ உள்ளிட்ட பல பூக்களுடன், பழங்கள், கரும்பு, அவல் போன்றவற்றை வைத்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி மகிழ்வார்கள். 

கணங்களின் தலைவனான விநாயகப் பெருமானின் திருவருளால், மக்கள் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகி, நலமும் வளமும் பெற்று, மகிழ்வுடன் வாழ்ந்திட வேண்டும் என்று வாழ்த்தி, முதல்வர் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 

இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கு தளர்வு குறித்து நீதிமன்றத்தில் அரசு என்ன கூறுகிறது என்பது முக்கியத்துவம் பெற்றதாக பார்க்கப்பட்டது. இன்று நிதிமன்றத்தில், ‘வீடுகளில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை தனிநபர்கள் நீர்நிலைகளில் கரைக்கலாம் என்றும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடவும், ஊர்வலம் நடத்தவும் விதித்த தடையை தளர்த்த இயலாது’ என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.