தேர்தல் பரப்புரையை ஆரம்பித்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, செல்லும் இடங்களில் எல்லாம் தி.மு.க.வின் முகமூடியை கிழித்து எறிந்து வருகிறார். அந்த வகையில் இன்று முதல்வர் பேசிய பேச்சு கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கீழ்த்தரமான வேலைகளைச் செய்தார் ஸ்டாலின்..! ரகசியங்களை போட்டு உடைத்த எடப்பாடி பழனிசாமி.
திருத்துறைப்பூண்டி அதிமுக வேட்பாளர் சுரேஷ்குமாரை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது, ‘விவசாயிகளின் துன்பம், விவசாயியான எனக்கு தான் தெரியும்.விவசாயிகளின் இன்னல்களை போக்கும் அரசாக அதிமுக அரசு உள்ளது. விவசாயிகளின் குறைகளை கண்டறிந்து, துயர்களை அரசு நீக்கியது. விவசாயிகளின் பிரச்னைகளை தீர்க்காத அரசு திமுக. காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை திமுக அரசு தான் கொண்டு வந்தது. அதனை அதிமுக அரசு தான் தடுத்து நிறுத்தியது. சரியான நேரத்தில் நீர் மேலாண்மையை மேற்கொண்டு, விவசாயிகளுக்கு தேவையானவற்றை வழங்கி உற்பத்தியை பெருக்கினோம்.
ஆட்சியை கவிழ்க்க நினைப்பது, கட்சியை உடைக்க நினைப்பது போன்ற கீழ்த்தரமான செயல்களை ஸ்டாலின் செய்தார். நிர்வாகிகள், தொண்டர்கள் பேராதரவுடன் திமுக தீட்டிய சதித்திட்டங்களை முறியடித்தோம். அதிமுக அரசால் புதிய தொழில்கள் தமிழகத்திற்கு வருவதுடன், வேலைவாய்ப்பும் அதிகரித்துள்ளது.
அரசின் நிர்வாக திறமையால், தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. ஏழை மக்கள் உயர்கல்வி படிக்க கல்லூரிகள் அமைத்து கொடுத்தது அதிமுக அரசு. அதிமுக அரசு தள்ளுபடி செய்த விவசாய கடனை, திமுக எப்படி மீண்டும் தள்ளுபடி செய்யும். அதிமுக அரசு மக்களுடைய அரசு என்று பேசினார் எடப்பாடி பழனிசாமி.