எடப்பாடி பழனிசாமிக்கு கைவசம் ஒரு தொழில் இருக்குது..! நல்லாத்தான் நாத்து நடுறாரு... ஸ்டாலினுக்கு பதிலும் சொல்றாரு.

இன்று நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுவதற்காக திருச்சியில் இருந்து நீடாமங்கலம் வழியே சென்றுகொண்டு இருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.


அப்போது சித்தமல்லி கிராமம் அருகே வயலில் நாற்று நடுவதற்காக ஆண்களும், பெண்களும் வரிசையாக செல்வதைப் பார்த்ததும் காரை நிறுத்தச் சொல்லி இறங்கினார். உடனே அங்கிருந்தவர்களிடம் ஒரு நாற்றுக் கட்டை கையில் எடுத்தவர், தன்னுடைய இளமைக்கால கதைகளைச் சொன்னபடி வயலில் இறங்கிவிட்டார்.

காலெல்லாம் சேறு ஆகிடும் என்று கிராம மக்கள் சொல்ல, ‘அதெல்லாம் பார்த்தா சோறு சாப்பிட முடியுமா?‘ என்று டைமிங் ஆக அடித்துக் கிளப்பிவிட்டு நாற்று நடத்தொடங்கிவிட்டார் எடப்பாடி பழனிசாமி.


இதைக் கண்டு மற்ற அமைச்சர்கள் அதிர்ந்துபோய் வேடிக்கை பார்த்தனர். அது மட்டுமின்றி, இது என்ன வகையான நாற்று என்பதையும் எடப்பாடி எடுத்துச்சொல்ல, அமைச்சர்கள் ஆச்சர்யமாகிவிட்டார்கள்.

அதுசரி, திடீரென ஏன் இப்படி வயலில் இறங்கி நாற்று நட்டார் என்று கேட்கிறீர்களா? சமீபத்தில் அறிக்கை வெளியிட்ட ஸ்டாலின், விவசாயி போன்று வேடம் போடுகிறார் எடப்பாடி என்று கூறியிருந்தார். அதை பொய் என்று நிரூபிக்கவே இப்படி அனைவர் பார்வையிலும் படும் வகையில் நாற்று நட்டாராம் எடப்பாடி பழனிசாமி.

சூப்பர் முதல்வரே.