கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து விவாதிப்பதற்கு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தன.
ஸ்டாலினுக்கும் மருத்துவத்திற்கும் என்ன சம்பந்தம்..? எடப்பாடி பழனிசாமி நச் கேள்வி.

இந்த நிலையில் இன்று முக்கிய அமைச்சர்கள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகுழு கூட்டத்தைமுடித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
அப்போது அவர், ’ கொரோனாவுக்கு தற்போதைய ஒரே மருந்து தனிமைப்படுத்துதல் மட்டுமே. வைரஸ் குறித்த அறிகுறி தென்பட்டால் மருத்துவமனைகளை மக்கள் உடனே அணுக வேண்டும். பிற மாநிலங்களைவிட தமிழகத்தில் மக்களின் ஒத்துழைப்பு நன்றாகவே உள்ளது. அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்க தொடர்ந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்களுக்கு உணவு, மருத்துவம், தங்குமிடம் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தினக்கூலி தொழிலாளர்களுக்கு அரசு எல்லா வசதிகளையும் செய்து வருகிறது. வெளிமாநிலத்தில் இருக்கும் தமிழர்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் உதவி செய்யும். அதற்கான செலவை தமிழக அரசே ஏற்கும்” என்று சொன்னார்
ஸ்டாலின் கேட்டுக்கொண்டபடி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “இது மருத்துவம் சார்ந்த பிரச்சினை என்பதால் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அவசியமில்லை” என்று தெரிவித்தார். மருத்துவக் கூட்டத்துக்கும் ஸ்டாலினுக்கும் என்ன சம்பந்தம் என்று முதல்வர் கேள்வி எழுப்பியது தி.மு.க. வட்டாரத்தில் கடும் அதிர்வை உண்டாக்கியுள்ளது.