அமித்ஷாவுடன் எடப்பாடி 40 நிமிட சந்திப்பு! டென்ஷனில் பன்னீர்செல்வம்!

டெல்லியில் தனக்கு மட்டும்தான் செல்வாக்கு இருக்கிறது என்று இதுவரையிலும் ஓ.பன்னீர்செல்வம் பயங்கரமாக சீன் போட்டுவந்தார்.


 அவரும், அவரது மகனும் பா.ஜ.க. தலைவர்கள் ஒவ்வொருவரையும் நேரில் பார்த்துப் பேசி போட்டோவை பரவவிட்டு வந்தனர். இந்த நேரத்தில்தான் எடப்பாடி டெல்லிக்கு பறந்து சென்றார். காந்தி விழாவை முன்னிட்டு சென்றதாக சொல்லிக்கொண்டாலும், அவரது முக்கியமான அஜென்டா அமித் ஷாவை சந்திப்பதுதான் என்றார்கள்.

அதன்படி அமித்ஷாவும் எடப்பாடியும் சந்தித்து 40 நிமிடங்கள் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார்களாம். இப்போது வரை மேல் சபையில் அ.தி.மு.க.வின் உதவி தேவை என்பதால் எடப்பாடிக்கு தடபுடலாக வரவேற்பு கொடுப்பட்டதாம்.

ஆனால், எந்தக் காரணம் கொண்டும், யாரும் பா.ஜ.க. கூட்டணியை எதிர்த்துப் பேசக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். ஜெயலலிதா சமாதி திறப்பு விழாவுக்கு மோடி வருவது குறித்து ஆலோசித்து சொல்லப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

இரண்டு அமைச்சர்களுடன் டெல்லிக்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி, அவர்கள் இருவரையும் அனுப்பிவிட்டு தனியே அமித்ஷாவை சந்தித்தது பன்னீர்செல்வத்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம். என்ன பேச்சு நடந்தது என்று ரகசியமாக விசாரித்துவருகிறாராம் பன்னீர்.