தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு, ராஜீவ் கொலையாளிகள் என குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஏழு பேரையும் விடுதலை செய்வதில் உடன்பாடு இல்லை என்ற தகவல் இன்றைய தி ஹிந்து நாளிதழி தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏழு பேர் விடுதலைக்கு இனி வாய்ப்பே இல்லையாம்! கவர்னரின் முடிவு எடப்பாடிக்கும் தெரியுமாம்!
முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் இந்தத் தகவலை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துவிட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ஏழு பேரையும் விடுதலை செய்யவேண்டும் என பல சமூக அமைப்புகள் பிரசாரம் செய்துவந்த நிலையில், அவர்களின் விடுதலை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் ஓர் தீர்ப்பு வழங்கியது.
அதன்படி, தமிழக ஆளுநர் ஏழு பேர் விடுதலை பற்றி முடிவு செய்யலாம் என்றும் தமிழக அரசு அவருக்கு பரிந்துரை செய்யலாம் என்றும் தெரிவித்திருந்தது.
உடனடியாக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பிவைத்தது. எந்த நேரமும் அந்த ஏழு பேரும் விடுதலை செய்யப்படலாம் என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால், இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஆர்வம் இல்லை என்று சொல்லப்பட்டு வந்தது.
ஏனென்றால், குற்றவாளிகளில் இருவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்பதால், வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வந்து குற்றம் செய்தவரை விடுதலை செய்வது சரியான நடவடிக்கையாக இருக்காது என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளதாம்.
நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று நம்பப்பட்டது. ஆனால், எதுவும் நடக்கவில்லை. இப்போதுதான், கவர்னருக்கு ஏழு பேர் விடுதலையில் உடன்பாடு இல்லை என்பது தெரியவந்துள்ளது. பாவம்தான்.