7 அமைச்சர்கள் பதவியை பறிக்க எடப்பாடி பிளான்! எலக்சன் ரிசல்டுக்கு பிறகு ரிவீட்டு!

எது எப்படி நடந்தாலும் சட்டமன்ற இடைத்தேர்தலில் எப்படியும் 12 தொகுதிகள் கிடைத்துவிடும் என்று உறுதியாக நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். அதனால், அடுத்து கட்சியில் எடுக்கவேண்டிய திடீர் நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகிறார்.


குறிப்பாக இந்தத் தேர்தலில் கொங்கு அமைசர்களாக தங்கமணி, வேலுமணி, வீரமணி ஆகியோர் வேலை மட்டும்தான் சொல்லிக்கொள்ளூம்படி இருந்தது என்று நினைக்கிறார். மற்றவர்களில் பெரும்பாலோர் கண் துடைப்பு வேலையிலும், பணம் சுருட்டும் லீலையில் ஈடுபட்டு மொத்தமாக அமுக்கிக் கொண்டார்களாம்.

அதனால் உளவுத்துறை மூலம் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் பெரும்பாலும் தமிழகத்தின் தென் பகுதியைச் சேர்ந்த ஏழு அமைச்சர்களின் பெயர்கள் இடம்பெற்று உள்ளன.  ஓ.எஸ்.மணியன், கடம்பூர் ராஜூ, சரோஜா, உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகிய நால்வருக்கும் நிச்சய கல்தா காத்திருக்கிறதாம்.

இதுதவிர சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் அமைச்சர் துரைக்கண்ணு ஆகியோர் மீதும் நடவடிக்கை இருக்குமாம். இந்த ஏழு பேர் தவிர்த்து இன்னும் சில அமைச்சர்களைத் தூக்கிவிட்டு, அந்த இடங்களுக்கு ஆதரவு எம்.எம்.ஏ.க்களை மந்திரி ஆக்கப் போகிறாராம் எடப்பாடி.

ரிசல்ட் வரும் முன்னே எதற்கு சாமி கனவுக் கோட்டை?