எடப்பாடி பழனிசாமி எங்களை ஏமாத்திட்டாரு! துபாய் தமிழ் தொழிலதிபர்கள் கொந்தளிப்பு!

முதல்வர் எடப்பாடி இங்கிலாந்து,அமெரிக்கா,ஐக்கிய அரபு எபிரேட்ஸ் போய்வந்த புகைப்படங்கள் மட்டும்தான் வேறு ஒன்றும் வரவில்லை என்று யாரும் வருத்தப்பட வேண்டாம்.இதோ முதல் புகார் வந்திருக்கிறது.


கேரள முதல்வரோ,ஆந்திர முதல்வரோ துபாய் வரும்போது அங்கு வாழும் தங்கள் மாநில மக்களை கட்டாயம் சந்திப்பார்கள்.அப்படி எடப்பாடி தங்களைச் சந்திப்பார் என்று துபாய் வாழ் தமிழர்கள் புகார் சொல்கிறார்கள். இவர்களில் துபாய் வாழ் தமிழ் தொழிலதிபர்களும்  அடக்கம்.

முதல்வரின் துபாய் பயண நிகழ்ச்சி நிரல் குறித்து அவர் வந்து இறங்கும் வரை வெளிப்படையாக தெரிவிக்கப் படவில்லை.மேலும்,எடப்பாடியின் முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு பெரும்பாலான தமிழ் தொழிலதிபர்களுக்கு அழைப்பே இல்லை.

அதன் பிறகு,முதலீட்டாளர்கள் மாநாடு முடிந்ததும் தமிழ் அமைப்பினரை சந்திப்பதாக அறிவித்தார்கள்.அதைத் தொடர்ந்து ஏராளமான துபாய் வாழ் தொழில் முனைவோர்கள் முதல்வரைச் சந்திக்க வந்தனர்.

அப்போது அங்குவந்த , வெளிநாட்டுத் தொழில் முதலீடுகளைக் கவனிக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரி அங்கு திரண்டிருந்த தமிழ் தொழிலதிபர்களில் குறிப்பிட்ட சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்தார்.இதனால் , நாங்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்திருக்கிறோம்.என்று துபாய்த் தமிழ் தொழிலதிபர்கள் சொல்கின்றனர்.

இது வெறும் ஆரம்பம்தான்,விரைவில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் இருந்தும் இது போன்ற செய்திகள் வரலாம் என்று முதல்வருடன் அமெரிக்கா சென்று வந்த அதிகாரிகள் வட்டாரம் சொல்கிறது. சரியாகத் திட்டமிடாமல் வெறும் விளம்பர யுக்திக்காக மக்கள் வரிப்பணத்தைச் செலவிட்டு எடப்பாடி அன் கோ சென்று வந்த வெள்நாட்டு பயணம் குறித்து மேலதிக விவரங்கள் இனியும் வெளிவரத்தான் போகின்றன.