கடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில் சசிகலா பிடியில் இருந்து அ.தி.மு.க.வை முழுமையாக மீட்டெடுத்த எடப்பாடி குரூப், இப்போது தங்களுக்குப் போட்டியாக யாரும் வர முடியாத அளவுக்கு கட்சி விதிகளில் திருத்தம் செய்துள்ளது.
தினகரன் மீது திடீர் பயம்.! மரண பீதியில் கட்சி சட்ட திட்டங்களை திருத்திய எடப்பாடியார்! அதிமுக பொதுக்குழு பின்னணி!
சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை அ.தி.மு.க .செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. பேனர், ஃப்ளக்ஸ் ரோட்டுகளில் வைக்கப்படவில்லை என்றாலும், தென்னை ஓலைகளால் செய்யப்பட்ட அலங்கார வளைவுகள் அசத்தலாகவே இடம் பிடித்தன. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த பொதுக்குழுவில் கட்சி விதிகளில் இரண்டு முக்கிய விதிகள் திருத்தப்பட்டன. அதாவது, உட்கட்சி தேர்தலில் போட்டியிடுவோர் 5 ஆண்டுகள் அ.தி.மு.க.வில் உறுப்பினராக இருக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராக போட்டியிட 5 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும் என திருத்தம் செய்யப்பட்டது. அதேபோன்று அதிமுகவில் இப்போதைய மாவட்ட எண்ணிக்கையை 56 மாவட்டங்களாக உயர்த்தியும் கட்சி விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது தினகரன் வரவை தடுக்கத்தான் என்று சொல்கிறார்கள். சசிகலா சிறையில் இருந்து வெளியே வரும் பட்சத்தில், அவரும் அவருடன் சேர்ந்து தினகரனும் அ.தி.மு.க.வில் இணைய முன்வருவார்கள். அவர்கள் எந்த வகையிலும் கட்சிப் பதவிகளில் அமரக்கூடாது என்பதற்காகத்தான் இந்தத் திருத்தம் என்கிறார்கள்.
ஆனால் பன்னீர் குரூப் ஆட்களோ, சசிகலா அ.தி.மு.க.வில் நுழைந்துவிட்டால், அடுத்த கணமே தனக்கு சாதகமாக பொதுக்குழுவைக் கூட்டி, தேவையான திருத்தங்கள் செய்துகொள்வார் என்று சொல்கிறார்கள். ஆனாலும், ஏதோ தங்கள் திருப்திக்காக இப்படியொரு விதியை சேர்த்துளார் எடப்பாடி.