முழுசா ஜெயலலிதாவா மாறிவரும் எடப்பாடி! மணிகண்டன் டிரைலர்தானாம், அடுத்து வரப்போகுது மெயின் பிக்சர்!

டாக்ட்டர் மணிகண்டன் சர்ச்சையில் மாட்டுவது புதிதல்ல,


ஜெயலலிதா இருந்தபோதே டெலிவிஷன் சானல் துவங்க ஆசைப்பட்ட ஒரு பத்திரிகை நிறுவனத்திடம் பேரம்பேசி மாவட்டச் செயலாளர் பதவியை இழந்தவர்.முனியசாமி மாவட்டச் செயலாளர் ஆனதில் இருந்து தன்னை அமைச்சர் மணிகண்டன் மதிப்பதே இல்லை என்று புலம்பிவருகிறார்.

ராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரத்தில் நேற்று நடந்த தேசிய கைத்தறி வாரவிழாவில்கூட மணிகண்டனின் ஆதரவாளர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்,மா.செ முனியசாமி அளிக்கப்படவில்லை. திருவாடனை தொகுதி எம்.எல்.ஏவான கருணாஸ் முதல்வர் எடப்பாடியைக் காணும் போதெல்லாம் மண்கண்டனைக் குறித்து புலம்பிக் கொண்டே இருந்தார்.

சமீபத்தில்தான் முதல்வரிடம் பேசிவிட்டேன் இனித் தொகுதிக்கு வருவேன் என்று அறிக்கை விட்டார்.இப்போது கேபிள் டிவி கட்டணம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியபோது சக அமைச்சரான உடுமலை ராதாகிருஷ்ணனை வெளிப்படையாக விமர்சித்ததால் பதவி பறிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும்,உண்மையான காரணம் வேறு என்று தெரியவந்திருக்கிறது.

எடப்பாடி , மெல்ல மெல்ல ஜெயலலிதா ஸ்டைலுக்கு மாறப்போவதன் முதல்ப்படிதான் மணிகண்டன் நீக்கமாம்.இன்னும் மேற்கு மாவட்டத்தில் ஒரு அமைச்சரையும் வடக்கு மாவட்டத்தில் ஒரு அ~~மைச்சரையும் குறி வைத்து இருக்கிறாராம் எடப்பாடி!. மணிகண்டன் நீக்கத்திற்கு கட்சிக்குள் கிடைக்கும் ரியாக்‌ஷனை பார்த்து விட்டும் அந்த இரண்டு அமைச்சர்களையும் நீக்குவாராம்.

அவர்களுக்கு பதிலாக அரசியல் பின்புலம்,ஜாதி செல்வாக்கு,வசதி இல்லாத ஆனால் மக்கள் செல்வாக்குள்ள இரண்டு எம்.எல்.ஏக்களைத் தேர்ந்தெடுத்து புதிய அமைச்சர்களாக அறிவிக்கப் போகிறார் என்று தெரிகிறது.

அதற்கு முன் டெல்லி போய்,சுஷ்மா மரணத்திற்கு இரங்கல் தெரிவிப்பது, காஷ்மீர் விவகாரத்துக்காக அமித்ஷாவை பாராட்டுவது, கூடவே சில அமைச்சர்கள் மேல் , மத்திய ஏஜென்ஸிகள் தொடர்ந்திருக்கும் சில வழக்குகளை முடக்குவது குறித்தும் பேசி விட்டு வந்து முழு ஜெயலலிதா அவதாரம் எடுக்கப் போகிறாராம் எடப்பாடியார்.