ஆறு பேர் மரணத்துக்குக் காரணமான எடப்பாடி ராஜினாமா செய்யணுமாம்.! ஸ்டாலின் மாதிரியே பேசுறாரே வைகோ!

இன்று மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் சிறப்பு நீதிமன்றத்துக்கு வருகை தந்தார்.


அப்போது திடீரென எடப்பாடி ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஓங்கிக் குரல் கொடுத்தார். என்னவாம் பிரச்னை?   என்ன காரணம்? நீட் தேர்வு வராது, நாங்கள் தடுத்து வைத்து இருக்கின்றோம், இரண்டு மசோதா நிறைவேற்றி மத்திய அமைச்சரவைக்கு அனுப்பி விட்டோம், குடியரசுத் தலைவருக்குச் சென்றுவிட்டது என்றெல்லாம் கூறி மாணவர்களை அ.தி.மு.க.வினர் நம்ப வைத்தார்கள். ஆனால், 2017ல் இந்த மசோதாவை அனுப்பி இருக்கின்றார்கள். அப்பொழுதே அவர்கள் நிராகரித்துத் திருப்பி அனுப்பி விட்டார்கள்.

ஆனால் அதை வெளியில் சொல்லாமல், மசோதாவை நிறுத்தி வைத்து இருக்கின்றார்கள், பரிசீலனையில் இருக்கின்றது என்றெல்லாம் சொல்லி, இரண்டு ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி இருக்கின்றார்கள். இதைவிட மோசடி என்ன இருக்க முடியும்? இப்பொழுது உண்மை வெளியே வந்து விட்டது.

நீட் தேர்வு வராது என்று மாணவர்களை நம்பச் செய்து, ஏழரைக் கோடி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி, கடைசியில் நீட் தேர்வு வந்து, மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காத ஆறு பேர் தற்கொலை செய்து இறந்து விட்டார்கள்.

இந்த ஆறு பேர் சாவுக்குக் காரணம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என்பதால் அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். பதவியில் நீடிக்கத் தகுதி இல்லை. என்று சொல்கிறார். இவர் பதவியேற்கக்கூடாது என்று சுப்பிரமணியம் சுவாமி பல்வேறு முட்டுக்கட்டை போட்டுவருகிறாரே, முதல்ல அதை உடைச்சுத் தள்ளுங்க வைகோ.