இ.பாஸ் இனிமேல் இனி ஈஸி பாஸ் ஆயிடுச்சு.! முதல்வர் எடப்பாடி அதிரடி அறிவிப்பு.

இ.பாஸ் வாங்குவதற்குள் நாக்கு தள்ளிவிடுகிறது, எக்கச்சக்க நேரமும் பணமும் வீணாகிறது, ஏகப்பட்ட இடைத்தரகர்கள் புகுந்துவிட்டார்கள் என்ற பேச்சு தொடர்ந்து இருந்துவருகிறது.


அதனால், ஒட்டுமொத்தமாக இ.பாஸ் ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் கோரிக்கை வைத்துவருகின்றன. சென்னையில் மட்டும் இப்போது கொரோனா தொற்று நாள்தோறும் குறைந்துவருகிறது. இ.பாஸ் முறையை முற்றிலுமாக நீக்கினால் சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுவிடும் என்பதால், இந்த திட்டத்தை அரசு நிராகரித்துவிட்டது.

அதேநேரம், இ.பாஸ் பெறும் நடைமுறையை எளிமைப்படுத்திவிட்டது. ஆம், ஏற்கனவே, தொழிலாளர்களுக்கான இ பாஸ் மாதம் ஒருமுறை மட்டும் புதுப்பிக்கப்பட்டால் போதும். வெளி மாநில தொழிலாளர்கள் இ பாஸ் முறையில் தாராளமாக அழைத்து வரலாம். இ பாஸ் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி அறிவித்து இருந்தார்.

இதையடுத்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் , பணி, வியாபாரம் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் என்ற காரணங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் இனி இ.பாஸ் குறித்த சிக்கல்கள் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.