படுத்த படுக்கையில் துரைமுருகன்! கண்டுகொள்ளாத ஸ்டாலின்! வேதனையில் உறவுகள்!

திமுக பொருளாளர் துரைமுருகன் உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் படுத்த நிலையிலேயே இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான அன்றே துரைமுருகன் திடீரென அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வேகமாகப் பரவின. ஆனால் அன்றைய தினமே அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

மாலையில் அண்ணா அறிவாலயம் சென்ற துரைமுருகன் தேர்தல் வெற்றிக்கு மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். அண்ணா அறிவாலயத்திற்கு வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் துரைமுருகன் வந்து சென்றார்.

அதன் பிறகு தினமும் அப்பல்லோ மருத்துவமனைக்கு செல்வது வீடு திரும்புவதுமாக துரைமுருகன் இருக்கிறார். வீட்டில் படுக்கையில் இருக்கும் துரைமுருகன் யாரையும் சந்திப்பது இல்லை என்று கூறுகிறார்கள். துரைமுருகனை சந்திக்க வருபவர்களை அவரது உதவியாளரும் மகன் கதிர் ஆனந்தம் மட்டுமே சந்தித்து பேசியதாகவும் சொல்கிறார்கள்.

வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது முதலே துரைமுருகனுக்கு மனது சரியில்லை என்கிறார்கள். கட்டுக்கட்டாக பணம் சிக்கியது உடன் திமுகவின் வியுகம் அடங்கிய சில விவகாரங்களும் வருமான வரித்துறை சோதனையின்போது அதிகாரிகளிடம் சிக்கியது. இந்த அளவிற்கு ஏன் அலட்சியமாக இருக்க வேண்டும் என்று துரைமுருகனை அப்போதே ஸ்டாலின் கடிந்து கொண்டதாக சொல்லப்பட்டது.

அதன் பிறகே துரைமுருகனை ஸ்டாலின் கண்டுகொள்ளாத நிலையில் தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருக்கும்போதும் ஸ்டாலின் தரப்பில் இருந்து முருகனை அணுகவில்லை என்கிறார்கள். தேர்தல் வெற்றியை தொடர்ந்து திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வீடு தேடிச் சென்று சந்தித்தார் ஸ்டாலின் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கும் அவர்களை சென்று சந்தித்து அவரது உறவுகளை கவலையடைய வைத்துள்ளது.

எப்போதும் உற்சாகமாக காணப்படும் துரைமுருகன் கடந்த ஒரு வாரமாகவே படுக்கையில் ஆழ்ந்த யோசனையில் இருப்பதாக அவரது உறவினர்கள் சொல்கிறார்கள்.