விஜயகாந்தை தொட்டான்! துரைமுருகன் கெட்டான்! சின்ன கேப்டன் தெறி பிரச்சாரம்!

சென்னை பெரம்பூர் வெள்ளையன் மார்க்கெட் பகுதியில் வட சென்னை நாடாளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் ஆதரத்து விஜயகாந்த் மகன் விஜய் பிரபாகரன் பிரச்சாரம் மேற்கொண்டார்


அப்போது பேசிய அவர்

அதிமுக கூட்டணி ஒரு மெகா கூட்டணி என்றும்,ஜெயலலிதா ஆசி பெற்ற கூட்டணி என்றும் கூறினார், மத்தியிலும் மாநிலத்திலும் மக்கள் ஆசி இருந்தால் தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும்,யார் என்ன கிப்ட் பாக்ஸ் கொடுத்தாலும் வாங்கி கொண்டு நீங்கள் இந்த கூட்டணிக்கு ஆதரவு அளியுங்கள் என கேட்டுக்கொண்டார்

வட சென்னை  மக்களவை தொகுதிக்கு முரசு சின்னத்திலும் ,பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என கேட்டு கொண்டார்

வேலூரில்  கொத்து கொத்தாக பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பிடித்து வருகின்றனர்,விஜயகாந்த் தொட்டவன் கெட்டான் என்பதற்கு இதுவே சான்று என்றார் கேப்டன் விஜயகாந்த் சிங்கம் போல் உள்ளார் ,உங்களையெல்லாம் பார்க்க விரைவில் வருவார்,

இந்த பிரச்சாரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் வடசென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் நா. பாலகங்கா தேமுதிக வட சென்னை  மாவட்ட செயலாளர் மதிவாணன் அதிமுக கூட்டணி கட்சி சேர்ந்த 500 மேற்பட்டோர் இந்த தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றுக் கொண்டனர்