கொரோனா வைரஸ்: போலி மாஸ்க் தயாரித்த நபர்கள் கைது.
கொரானாவை வியாபாரமாக்கிய விபரீதம்..! போலி முகக்கவசங்கள் தயாரித்து அதிக விலைக்கு விற்பனை..! இந்த கொடுமை எங்கு தெரியுமா?

ஜகர்த்தா: போலி மாஸ்க் தயாரித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீனாவில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது உலகம் முழுவதும் பரவ தொடங்கியுள்ளது. இதனால், உலகம் முழுக்க மாஸ்க் விற்பனை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி சிலர் அதிக விலைக்கு மாஸ்க்குகளை விற்பனை செய்வது, மாஸ்க்குகளை பதுக்கி வைத்து டிமாண்டை அதிகரிப்பது மற்றும் போலியான மாஸ்க் தயாரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இதில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக, இந்தோனேசியா நாட்டில் உள்ள பாலி, ஜகர்த்தா போன்ற இடங்களில் அதிக அளவில் போலி மாஸ்க் தயாரித்து சிலர் உள்நாட்டிலும், வெளிநாடுகளுக்கும் விநியோகிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் அந்த இடங்களில் இந்தோனேசிய போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
இதன்போது, பெரும் எண்ணிக்கையில் போலி மாஸ்க்குகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுதவிர, போலி மாஸ்க்குகளை குடோன்களில் பதுக்கி வைத்திருப்பதையும் போலீசார் கண்டறிந்தனர். இத்தகைய ஒழுங்கீனச் செயலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.