தினமும் ஃபிரஸ் ஜூஸ் குடித்தால் உயிருக்கே ஆபத்து! ஆய்வில் திடுக்கிடும் தகவல்!

தினமும் ஒருமுறை பிரஷ் ஜூஸ் என நெடுநாள் குடித்து வந்தால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.


வெயில் தாக்கம், உடல் நலம் ஆரோக்கியம் என அனைத்திற்கும் ஒரு தீர்வாக தினமும் பிரஷ் ஜூஸ் குடிப்பது இயல்பான ஒன்று. அமெரிக்க சுமார் 15000 நபர்களிடம் ஆய்வு நடத்தியது. அவர்களுக்கு தினமும் 350 முதல் 500 மில்லி லிட்டர் அளவிலான பிரஸ் ஜூஸ் அதாவது, சுத்தமான பழச்சாரினை கொடுத்தது. ஆய்வின் முடிவில் இயல்பானவர்களை விட 24% அதிகமான உயிரிழக்க வாய்ப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும், சுத்தமான பழச்சாற்றில் உள்ள சர்க்கரை அளவானது, நமக்கு பசியை கட்டுப்படுத்தும் வண்ணம் இருந்தாலும் அதிலுள்ள நார் சத்து செரிமானத்தை கட்டுப்படுத்துகிறது. இயல்பாகவே, பலரும் ஜுஸ் குடித்துவிட்டு சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளதால், செரிமான கோளாறு, வயிற்றெரிச்சல், நீரிழிவு மற்றும் உடல் எடை வழக்கத்திற்கு மாறாக அதிகரிப்பு ஆகியவை அதிகரிக்கிறது.

மேலும், ஒவ்வொருவரின் வாழ்க்கை முறை, அன்றாட பழக்க வழக்கங்கள் பொருத்தும் 100% பழச்சாற்றின் செயல்பாடுகள் மாறுகின்றன. இது மற்ற குளிர்பாணங்களை போலவே நமது உடலில் செயல்திறனை காட்டுகிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுபோன்ற சுத்தமான பழச்சாற்றினை தினமும் பருகுவதால் உயிரிழப்பை சந்திக்க நேரிடும் என்கிற திடுக்கிடும் ஆய்வு முடிவு அமெரிக்காவில் மட்டுமல்ல உலகில் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இதற்கு தீர்வினையும் ஆய்வின் முடிவில் மருத்துவர்கள் தெரிவித்தனர். அதாவது, தினமும் 250 மில்லி லிட்டர் அல்லது அதற்கும் குறைவான பழச்சாறினை ஒரு முறை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல, முழு பழமாக உண்பதால், சர்க்கரையின் அளவு 35% குறைவாகிறது. பின்விளைவுகள் எதுவும் இராது. மேலும், 7% நீரிழிவு நோய் குறைவாகிறது. உதாரணமாக, வாழைப்பழம், மாம்பழம் ஆகியவற்றை ஜூஸ் ஆக இல்லாமல் பழமாக சாப்பிடுவதே சிறந்தது என்பது தெரியவந்துள்ளது.