டெல்லி: போதையில் ஒட்டகச்சிவிங்கி மேல் ஏறி சவாரி செய்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒன்பது அடி உயர ஒட்டகச்சிவிங்கி மீது தாவி ஏறி இளைஞர் செய்த விபரீத செயல்! வலை வீசி தேடும் போலீஸ்!

கஜகஸ்தான் நாட்டில் உள்ள ஷைம்கென்ட் என்ற வன உயிரினங்கள் கண்காட்சி மையம் உள்ளது. இங்கு, போதையில் ஒரு நபர் பார்வையிட வந்துள்ளார். திடீரென பார்வையாளர்கள் தடுப்பை மீறி, உள்ளே நுழைந்த அந்த நபர் அங்கு நின்றுகொண்டிருந்த ஒட்டகச்சிவிங்கி ஒன்றின் மீதேறி அமர்ந்துகொண்டார்.
பிறகு சவாரி செய்வது போல அவர் செய்ய தொடங்கினார். இதனால் அதிருப்தி அடைந்த ஒட்டகச்சிவிங்கி அந்த நபரை கீழே தள்ளிவிட்டது. ஆனாலும் அடங்காத அவர், தடுப்பு வழியாக மேலே ஏறி, மறுபடியும் ஒட்டகச்சிவிங்கி மேலே ஏறி அமர்ந்து சவாரி செய்ய தொடங்கினார். எனினும், ஒட்டகச்சிவிங்கி அவரை திரும்ப கீழே தள்ளிவிட்டது. இதனால் அவருக்கு இடுப்பு பகுதியில் நல்ல அடிபட்டது.
வலியுடன் முனகிய அந்த நபர் ஒட்டகச்சிவிங்கியிடம் இருந்து தப்பி, ஓடிச் சென்று தடுப்பில் ஏறி, வெளியே வந்துவிட்டார். இந்த வீடியோவை பார்வையாளர்கள் பலரும் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பகிர, தற்போது, அந்த போதை நபரை போலீசார் கைது செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.