விளைநிலங்களில் ஷாக் ஏன் எப்படி எதற்கு அடிக்கிறது?

தமிழகத்தில் விளை நிலங்களில் உயர் அழுத்த மின்சாரம் கொண்டுசெல்லக்கூடாது, ரோட்டோரம் குழாய்களில் பதித்து செல்லவேண்டும் என்று மக்கள் போராடி வருகிறார்கள்.


இதற்கு காரணமாக சொல்வது, அதுபோன்ற உயர் மின்அழுத்த கோபுரத்துக்கு அருகில், உயர் மின் அழுத்த ஒயர்களுக்கு கீழாக நின்று, கையில் டியூப் லைட்டை பிடிக்க அந்த டியூப் லைட்கள் எரிகிறது. உடலில் மின்சாரம் சின்ன அளவுக்குப் பாய்கிறது. இதனால் விளைநிலங்களில் மின் அழுத்த ஒயர்கள் கொண்டுசெல்லக்கூடாது என்பதுதான் மக்களின் கோரிக்கை. ஏனென்றால், ஒயர்கள் அறுந்துவிழுந்தால் அல்லது குழந்தைகள், மாடுகள் செல்லும்போது அதிக திறனுடன் மின்சாரம் பாய்ந்து தாக்கப்பட வாய்ப்பூண்டு என்றுதான் போராடுகிறார்கள்.

ஆனால், இதற்கு ஆதரவாகவும் ஒரு கும்பல் பேசுகிறது. அவர்கள் சொல்வது என்ன தெரியுமா? அதாவது, உயர் மின் அழுத்த ஒயர்கள் செல்லும் பாதையில் மின் காந்த அலைகளின் தாக்கம் இருக்கிறது என்பதுதான் அவர் சொல்ல வரும் தகவல். இதை இதுவரை யாரும் மறுக்கவில்லை. உயர் மின் அழுத்த ஒயர்களுக்கு கீழே நிற்பது பாதுகாப்பானது அல்ல என்பது எல்லாரும் அறிந்ததே. அதனால்தான் மின் கோபுரம் அமைந்துள்ள இடம் மட்டுமல்லாது, மின்பாதை செல்லும் வழி முழுவதிலும் உள்ள தனியார் நிலங்களை அரசு கையகப்படுத்தி அதை தனியார் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்ள சொல்கிறது.

ஆனாலும், மின் கோபுரம் அமைந்துள்ள இடம் தவிர, மின்சார ஒயர்கள் செல்லும் பாதைக்கு கீழே விவசாயம் நடப்பது வாடிக்கையாக இருக்கிறது. ஒரு பக்கம் மின் கோபுரங்களுக்கு இடம் கொடுக்க மாட்டோம் என்று விவசாயிகள் போராட்டம் நடத்தும் நிலையில், மின் கோபுரங்களால் மின்காந்த அலைகள் தாக்குதல் இருக்கிறது என்று சுட்டிக் காட்டும் எம்பியின் நடவடிக்கை மின் கோபுரங்கள் கூடாது என்ற விவசாயிகள் வாதத்துக்கு வலுசேர்க்கிறது.

அந்த வகையில் பார்த்தால், எந்த ஒரு வளர்ச்சி திட்டத்தையும் நிறைவேற்ற முடியாது. ரயில்வே தண்டவாளத்தில் கையில் குடையுடன் நடந்து செல்லக்கூடாது. சென்றால் மின்சாரம் தாக்கும் என்று எச்சரிக்கப்படுகிறது. அதற்காக ரயில் பாதைகளே வேண்டாம் என்று சொல்லிவிட முடியுமா? அதுபோலத்தான், உயர் மின் பாதை வழித்தட திட்டங்களும். வெளிமாநிலங்களில் இருந்து, தேசிய மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து, மாநில தேவைக்கு போதுமான மின்சாரத்தை பெறுவதற்கு இந்த பாதைகள் அவசியமானது.

பாதகங்களும் பக்கவிளைவுகளும் இல்லாமல் எந்த ஒரு வளர்ச்சித் திட்டமும் சாத்தியமில்லை. ‘மிகை நாடி மிக்க கொளல்’ என்ற வள்ளுவர் வாக்கிற்கேற்ப, அந்த பாதகமும் பக்கவிளைவும் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதில்தான் அந்த திட்டம் தேவையா இல்லையா என்பது முடிவாகிறது. அதுசரி, இத்தனை தூரம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள முடியும் என்றால் உங்கள் வீட்டுப்பக்கம் இதனை கொண்டுபோகலாமே கோபால்ஜி.