வயிற்று வலி என வந்த 55 வயது முதிய பெண்மணிக்கு ஆணுறையை பரிந்துரை செய்த மருத்துவரை நிர்வாகம் அதிரடியாக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
வயிறு வலிப்பதாக வந்த பெண்ணுக்கு ஆணுறை! ஆண் டாக்டரால் ஹாஸ்பிடலில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!

அஷ்ரப் என்பவர் ஜார்கண்ட் மாநிலத்தின் காட்சிலா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த மாதம் தன்னிடம் வந்த 55 வயது மிக்க பெண் ஒருவருக்கு வயிற்று வலிக்கான சிகிச்சை அளித்துள்ளார். அப்போது பெண்ணுக்கு எழுதிகொடுத்த மருந்து சீட்டில் ஒருசில மருந்துகளுடன் நிரோத் என்றும் எழுதி கொடுத்துள்ளார்.
அந்தப் பெண்மணியும் மருந்து கடையில் கொடுத்து இதை கொடுங்கள் என கேட்டபோது, மருந்துக்கடையில் பணிபுரிபவர் இதில் காண்டம் என்று எழுதியிருக்கிறது. உண்மையில், இதைதான் மருத்துவர் பரிந்துரை செய்தாரா? என அந்தப் பெண்ணிடம் கேட்டார்.
இதை கேட்டதும் சற்று அதிர்ந்து அந்த பெண், நேரடியாக மருத்துவமனையின் தலைமை மருத்துவரிடம் அஷ்ரப் குறித்து புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் அத்துடன் முடிந்து விடாமல் ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவையிலும் விவாதிக்கப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட மருத்துவரை விசாரிக்க 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டு கடுமையாக விசாரிக்கப்பட்டது.
அந்த விசாரணையின்போது அஷ்ரப் ஏற்கனவே அதே மருத்துவமனையில் உள்ள சில நர்சுகளிடம் தவறுதலாக நடந்து கொண்டிருப்பதும், சில்மிஷங்கள் செய்து இருப்பதும் அம்பலமாகியது. இதனால் இவரை உடனடியாக நீக்கும்படி சுகாதாரத்துறை அமைச்சகம் தலைமை மருத்துவருக்கு ஆணை பிறப்பித்தது.
இதனடிப்படையில், அஷ்ரப் மருத்துவப் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.