டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவர் குடும்பத் தகராறில் விஷ ஊசிப் போட்டுக்குகொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.
டாக்டர் மனைவியை போதை மருந்துக்கு அடிமையாக்கி டாக்டர் கணவன் செய்த விபரீத செயல்! கதறி அழும் பெண்ணை பெற்றவர்கள்!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவரான ஷிகர்மூர், கடந்த ஆண்டு சோனம் என்ற பெண்ணை கரம்பிடித்தார். ஆரம்பத்தில் சுமூகமாக இருந்த இவர்களின் உறவில் லேசாக விரிசல் ஏற்பட்டுள்ளது. அதற்குக் காரணம் கணவரின் போதைப் பழக்கத்துக்கு அடிமையானதுதான். மேலும் மனைவிக்கும் கஞ்சாவை கொடுத்து உட்கொள்ள வற்புறுத்தி உள்ளார் கணவர்.
இதுமட்டுமின்றி சோனமை மாமியாரும், மாமனாரும் கொடுமைப் படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வீட்டை விட்டு வெளியேறிய சோனம், தந்தை வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளார். பின்னர் அவரை சமாதானம் செய்து வைத்து மீண்டும் கணவர் வீட்டிற்கு அனுப்பி உள்ளார்.
ஆனால் மீண்டும் அவரை கொடுமைப் படுத்தி உள்ளனர் கணவர் வீட்டார். இதனால் வீட்டை விட்டு வெளியேறி தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளார் பெண் மருத்துவர் சோனம். இந்நிலையில் தனிமையில் சில மாதங்களாக வாழ்ந்து வந்த சோனம் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். திருமணம் செய்து கொள்வதற்கு முன் இருந்த சுதந்திரம், தற்போது இல்லையே என கருதி மருத்துவத்திற்காக பயன்படுத்தப்படும் ஊசியை எடுத்து தனக்குத் தானே போட்டுக்கொண்டு உயிரிழந்துள்ளார்.
கணவர், மாமனார், மாமியார் கொடுமை காரணமாகவே மகள் உயிரிழந்துவிட்டதாக சோனமின் தந்தை போலீசில் புகார் அளித்தார். இதை அடுத்து வழக்குப் பதிவு செய்து போலீஸ் விசாரித்து வருகிறது.