கர்ப்ப காலத்தில் வாய் வழி புணர்வு! கணவன் – மனைவிக்கு செக்சாலஜிஸ்ட் வழங்கும் அறிவுரை!

மனைவி கர்ப்பமாக இருக்கும்போது தாம்பத்யம் எப்படி வைத்துக் கொள்வது என்று குழம்பிப் போய் பலரும் பலவித தவறுகளை செய்துவிடுகின்றனர்.


மனைவியோ, காதலியோ, தோழியோ கர்ப்பமாக இருக்கும் போது தாம்பத்ய வாழ்க்கை கூடாது என்கிற ஒரு மரபு இருக்கிறது. ஆனால் கர்ப்பமாக இருக்கும் போது தாம்பத்யம் சரி தான் என்கிறது ஆங்கில மருத்துவம். கர்ப்பம் அடைந்த முதல் மூன்று மாதங்கள் மற்றும் பிரசவத்திற்கு கடைசி ஒரு மாதம் மட்டும் தாம்பத்யதத்தை தவிர்க்கலாம் என்கிறார்கள்.

ஆனால் முதல் மூன்று மாதம் மட்டும் அல்ல எப்போதும் கணவன் – மனைவி இடையே வாய் வழி புணர்ச்சி தவறில்லை என்று ஆங்கில மருத்துவம் சொல்கிறது. இது குறித்து பிரபல செக்சாலஜிஸ்ட் கூறியுள்ள கருத்துகளை தற்போது பார்க்கலாம்.

மனைவி கர்ப்பமான பிறகு குறிப்பிட்ட சில காலங்களுக்கு கணவனின் பாலியல் தேவையை பூர்த்தி செய்ய வாய் வழி புணர்வு மட்டுமே சாத்தியம். இதே போல் கர்ப்பமான மனைவியும் கூட பாலியல் தேவையை விரும்பினால் அதற்கும் இதே வழி தான் சரி.

ஆனால் பாலியல் நோய் உள்ள துணையுடன் வாய் வழி புணர்வு மேற்கொள்வது என்பது மிகவும் ஆபத்தானது. அதிலும் கர்ப்ப காலத்தில் பெண்கள் கணவனுக்கு வாய் வழி புணர்ச்சி இன்பத்தை கொடுக்கும் போது மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 

கணவனுக்கு பாலியல் ரீதியாக தொற்றும் நோய் இல்லை என்பதை மனைவி மருத்துவர் மூலம் உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. இதே போல் மனைவிக்கு கணவன் வாய் வழி புணர்ச்சி இன்பத்தை கொடுக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

மனைவியின் அந்த உறுப்பிற்குள் வாய் மூலமாக காற்றை செலுத்திவிடக்கூடாது. அப்படி செலுத்தினால் மிக மோசமான விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே கர்ப்ப காலத்தில் வாய்வழி புணர்ச்சி என்றால் கவனம் தேவை.