வெயில் நேரத்தில் முகம் கருப்பாக இல்லாமல் பளீச் பெற வேண்டுமா?

அடிக்கிற வெயிலில் ஆவின் பால்கூட கருப்பு நிறமாக மாறி வருகிறது. பெண் பிள்ளைகளுக்கு சொல்லவா வேண்டும்? கொஞ்சநேரம் வெயிலில் சென்றுவிட்டு வீடு திரும்பினால் முகம் பிசுபிசுவென்று கருமை நிறத்துக்கு மாறிவிடும்.


அதற்காக வெயிலில் போகாமல் இருக்க முடியுமா என்ன? சந்தோஷமா வெயிலில் சுற்றிவிட்டு வாருங்கள். வீட்டிற்கு வந்ததும் இதோ சின்னச்சின்ன நடவடிக்கைகளை மேற்கொண்டால் போதும், காணாமல் போன பளீச் உடனடியாகக் கிடைத்துவிடும்.

திராட்சைப் பழத்தைப் பிழிந்து, சாற்றை முகத்தில் அப்பிக்கொண்டு காயும் வரை காத்திருக்கவும். அதன்பிறகு குளிர்ந்த நீரில் கழுவிப் பாருங்கள் முகம் மீண்டும் பளீச் நிலைக்கு வந்துவிடும். அதேபோல் சோற்றுக் கற்றாழை பிசினை எடுத்து முகத்தில் அப்பி கொஞ்சநேரம் காயவைத்து கழுவினாலும் நல்ல பலன் கிடைக்கும்.

முல்தானிமட்டியுடன் சந்தனம் தயிர் கலந்து முகத்தில் மாஸ்க் போன்று போட்டு காய வைக்கவும். நன்றாக காய்ந்ததும் குளிர் நீரில் கழுவினால் முகத்தில் இருந்த கருமை எல்லாம் காணாமல் போய்விடும்.

இரண்டு ஸ்பூன் கடலைமாவுடன்,  பால், ரோஸ் வாட்டர் சேர்த்து, இந்தக்  கலவையை நன்றாக முகத்தில் பூசி காய வைக்கவும். இந்தக் கலவை காய்ந்தவுடன் குளிர்ந்த நீரில் கழுவினால் சருமம் மென்மையாகி நல்ல நிறம் கிடைக்கும்.