மாட்டின் தோல் கொண்டு பதப்படுத்தப்பட்டு தயாரிக்கும் இந்த பறைக் கருவியில் இருந்து வருகின்ற சத்தத்தைக் கேட்டு நம்முடைய நாடி நரம்புகள் அனைத்தும் துள்ளிக் குதித்துக் கொண்டு ஒருவித அதிர்வை (வைபரேஷனை) நமக்குக் கொடுக்கும்.
இறந்த வீட்டில் பறை ஏன் அடிக்கிறாங்கனு தெரியுமா! எல்லாத்துக்கும் ஒரு காரணம் வச்சிருக்காங்கப்பா!
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக நம்முடைய நாட்டை எடுத்துக் கொண்டீர்கள் என்றால் மருத்துவ வசதிகளும் நிறுவனம் மயப்பட்ட மருத்துவ வசதிகளும் மிகக் குறைவு.
அதுபோன்ற சமயங்களில் யாரேனும் ஒருவர் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தால் அவர் இறந்து விட்டாரா இல்லை உயிர் இருக்கிறதா என்று ஒரு முடிவுக்கு வருவது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. இந்த பிரச்சினையை சரிசெய்யவே ஆரம்ப காலத்தில் பறை பயன்படுத்தப்பட்டது.
ஒருவர் மூர்ச்சையாகிக் கிடக்கிறார். அவரைக் காப்பாற்றவோ அல்லது இறந்து போய்விட்டார் என்பதை உறுதி செய்யப் பயன்படுத்தப்பட்டதால் இந்த பறை இசைக்கருவிக்கு மருத்துவ குணங்கள் இருக்கிறதா என்றெல்லாம் கோக்கு மாக்காக யோசிக்க ஆரம்பிச்சுடாதீங்க.
இப்படி மூர்ச்சையாகிக் கிடப்போர் இருக்கிற இடத்தில் பறை முழங்கப்படுகிறது. ஒரு இடத்தில் யார் ஒருவர் பறை இசைக்கும் சத்தத்திற்கு கொஞ்சமும் ஆடாமல் அசையாமல் பிணம் போல இருக்கிறாரோ அவருக்கு உயிர் இல்லை இறந்துவிட்டார் என்ற முடிவுக்கு வந்திருந்தார்கள் நம்முடைய முன்னோர்கள்.
இந்த பழக்கம் தொடர்ந்து இறந்து போனவர்கள் இருக்கும் இடத்தில் அடிக்கப்பட்ட பறை இசை அப்படியே மாற்றம் பெற்று இறந்தவர்களின் வீடுகளில் பறை இசை வாசிக்கப்படுவது கட்டாயமான சடங்காக மாற்றப்பட்டு விட்டது.