இந்து மதத்தை ஓட்டுக்கு மட்டுமே பயன்படுத்திவரும் ஸ்டாலின் தேவருக்கு அஞ்சலி செலுத்துவதை எதிர்க்கும் விதமாக இன்று, கோ பேக் ஸ்டாலின் டிரெண்டிங் ஆகியுள்ளது.
இன்று பெரும் டிரண்டிங் ஆன, ‘கோ பேக் ஸ்டாலின்’… ஏன் தெரியுமா?

தமிழக கோவில்களில் திருநீறு பூசிவிட்டால் அதனை உடனே அழிக்கும் ஸ்டாலின், ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் பதவியேற்பு விழாவிலும், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் தேவர் ஜெயந்தி நாளில் வைக்கப்பட்ட திருநீற்றை அழிக்காததும் விமர்சனமாகியுள்ளது.
கடவுள் மறுப்பு என்ற அடிப்படை கொள்கையுடன் இயங்கி வரும் இயக்கம் திமுக அந்த கட்சியின் தலைவராக இருந்த கருணாநிதி கடைசி வரை கடவுள் மறுப்பில் உறுதியாக இருந்தார். இதே போல் மு.க.ஸ்டாலினும் கூட கடவுள் மறுப்பு குறித்து வெளிப்படையாக பேசமாட்டார் என்றாலும் விபூதி வைப்பது, கோவிலுக்கு செல்வது போன்ற செயல்களில் ஈடுபடுவது இல்லை.
கடந்த 2018ம் ஆண்டு திருச்சி ஸ்ரீரங்கம் சென்ற ஸ்டாலினுக்கு, அர்ச்சகர்கள் பொன்னாடை போர்த்தி, விபூதி வைத்துவிட்டனர். ஆனால் சில நொடிகளில் அந்த விபூதியை அழித்து தான் திராவிட பாரம்பரியத்தை சேர்ந்தவன் என்பதை நிரூபித்துவிட்டு புறப்பட்டார் ஸ்டாலின். ஸ்ரீரங்கம் கோவில் அர்ச்சகர் வைத்த விபூதியை ஸ்டாலின் அழித்தது அப்போதே சர்ச்சையை ஏற்படுத்தியது.
அடுத்ததாக மீண்டும் ஒரு விபூதி சர்ச்சையில் சிக்கினார் ஸ்டாலின். கடந்த ஆண்டு இதே நாளில், பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு சென்ற ஸ்டாலினுக்கு அங்குள்ள பூசாரி விபூதி மற்றும் குங்குமம் வைத்துவிட்டார். ஸ்ரீரங்கத்தில் செய்தது போலவே விபூதியை ஸ்டாலின் அழிப்பார் என்று அவருடன் இருந்தவர்கள் எதிர்பார்த்த நிலையில், அதனை பவ்யமாக பெற்றுக்கொண்டார்.
தற்போது, ஸ்ரீரங்கத்தில் பிராமணர் ஒருவர் வைத்த விபூதியை அழித்த ஸ்டாலின், தேவர் ஒருவர் வைத்த விபூதியை அழிக்காதது ஏன்? வாக்கு வங்கி பாதிக்கப்படும் என்கிற பயத்திலா என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
விபூதி விஷயத்திலேயே இந்துக்களை வாக்குக்காக மட்டுமே பயன்படுத்தி வரும் ஸ்டாலின், சமீபத்தில் இந்து பெண்களை இழிவாக பேசிய விசிக தலைவர் திருமாவளவனுக்கு ஆதரவு குரல் எழுப்பியது குறிப்பிடத்தக்கது. தற்போது ட்விட்டரில் #GoBackStalin எனும் ஹேஷ்டாக் ட்ரெண்டாகி வருகிறது.